விவசாயிகளுக்கு வழ்கப்படும் குறுகிய கால கடனுக்கான வட்டி குறைக்கப்படலாம் என்று மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
மக்களவையில் இன்று துணை மாணியக் கோரிக்கைக்கு பதில் அளித்து பேசும் போது சிதம்பரம் கூறியதாவது, “விவசாயிகளுக்கு வழங்கப்படும் குறுகிய கால கடனுக்கு வழங்கப்படும் வட்டி கடந்த ஆண்டுகளில் 10 விழுக்காட்டில் இருந்து 7 விழுக்காடாக குறைக்கப்பட்டுள்ளது. மேலும் வட்டியை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை வந்தால் கனிவுடன் பரிசீலிக்கப்படும்.
வங்கிகளுடனான அடுத்த ஆலோசனை கூட்டத்தின் போது வங்கிகளிடம் இயற்கை வேளாண்மைக்கு கொடுக்கும் கடனின் அளவை அதிகரிக்கும் படி கேட்டுக் கொள்வேன்.
விவசாயிகளுக்கு கடன் வழங்குவது பற்றி ஆலோசனை கூற அமைக்கப்பட்ட வைத்தியநாதன் கமிட்டியின் இரண்டாவது பரிந்துரைகள் மாநில முதலமைச்சர்கள், நிதி அமைச்சர்களுக்கு அணுப்பப்பட்டது. இதில் சிலவற்றில் மத்திய, மாநில அரசுகள் மத்தியில் ஒருமித்த கருத்து உருவாகியுள்ளது. அவர்களின் முழு கருத்து கிடைத்த பிறகு, வைத்தியநாதன் கமிட்டி பரிந்துரைகள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
நன்றி : http://tamil.webdunia.com/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக