உரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
உரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

12 பிப்., 2009

நிலக்கடலை - கூடுதல் மகசூல்

நிலக்கடலை - கூடுதல் மகசூல்….

நிலக்கடலை சாகுபடியில் கூடுதல் மகசூல் பெற நுண்சத்துக் கரைசலை தெளிக்குமாறு வேளாண் துறை யோசனை தெரிவித்துள்ளது.

தற்போது சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலக்கடலைப் பயிர் 25 நாள் வளர்ச்சிப் பருவத்தில் உள்ளது. இந்தத் தருணத்தில் ஊட்டச் சத்து உரக் கரைசல் தெளிப்பது மிகவும் அவசியம்.


இதற்கு டிஏபி 1 கிலோ, அம்மோனியம் சல்பேட் 400 கிராம், பொட்டாஷ் 1 கிலோ, போராக்ஸ் 200 கிராம், தண்ணீர் 200 லிட்டர் தேவை.


முதல் நாள் மாலை 1 கிலோ டிஏபி உரத்தை நன்கு தூள் செய்து, அதை 10 லிட்டர் நீரில் ஊறவைத்து, மறுநாள் வடிகட்ட வேண்டும்.


வடிகட்டிய கரைசலுடன் அம்மோனியம் சல்பேட் 400 கிராம், போராக்ஸ் 200 கிராம், பொட்டாஷ் 1 கிலோ ஆகியவற்றை கலந்து 1 டேங்குக்கு அரை லிட்டர் வீதம் 20 கலவை தயாரித்து 1 ஏக்கர் பரப்பில் கைத்தெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும்.



இதேபோல, விதைத்த 25 மற்றும் 40-வது நாள் என 2 முறை தெளிக்க வேண்டும்.


பின்னர், பயிர் வளர்ச்சி ஊக்கி மருந்தான பிளானோபிக்ஸ் 175 மில்லி மருந்தை 200 லிட்டர் நீரில் கலந்து 1 ஏக்கர் பரப்பில் கைத்தெளிப்பான் மூலம் மாலை நேரத்தில் தெளிக்க வேண்டும்.


இந்த முறைகளைக் கையாண்டால் பூக்கள் உதிர்வது தடுக்கப்பட்டு, விழுதுகள் அதிகம் உருவாகி, திரட்சியான மணிகள் கிடைக்கும். இதனால் 25 விழுக்காடு கூடுதல் மகசூல் கிடைக்கும் என்று பட்டுக்கோட்டை வேளாண் உதவி இயக்குநர் வை. கலியபெருமாள் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார் .

நன்றி :-
இயற்கை முறையில் இத்தகைய நுண்சத்துக் கரைசலை    தயாரிக்க முடியும் -தகவல் தெரிந்தவர்கள் கூறுங்கள்.

11 அக்., 2008

வேம்பு பூச்சி மருந்து

பல்கலை தயாரிப்பில் வேம்பு பூச்சி மருந்து!



புது டெல்லி: இந்தியாவின் முன்னணி பல்கலைக் கழகங்களில் ஒன்றான தபார் பல்கலைக் கழகம் (Thapar University) வர்த்தக ரீதியாக வேம்பு பூச்சி மருந்து தயாரிக்க போவதாக அறிவித்துள்ளது.


இந்த பல்கலைக் கழகத்தில் உள்ள தொழிலகத்திலேயே, வேம்பு பூச்சி மருந்து தயாரிக்கப்படும்.



இந்த பல்கலைக் கழகமும், பஞ்சாப் மாநில விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப குழுவும் இணைந்து வேம்பு பூச்சி மருந்து தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.



இங்கு முதலில் மணிக்கு 50 கிலோ வேம்பு பூச்சி மருந்து தயாரிக்கும் இயந்திரங்கள் நிறுவப்படும். இதன் மூலம் வருடத்திற்கு நான்கு டன் வேம்பு பூச்சி மருந்து தயாரிக்கப்படும்.


இதற்கு தேவையான வேப்ப இலை, வேப்பங் கொட்டை ஆகியவைகளுக்கா வேப்ப மரம் வளர்க்கப்படும். இந்த வேப்ப மரங்கள் பல்கலைக் கழகத்தின் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப தொழில் முனைவோர் பூங்காவில் வளர்க்கப்படும். இதிலிருந்து பூச்சி மருந்து தயாரிக்க தேவையான வேப்பங் கொட்டை பெறப்படும்.

இது குறித்து தபார் பல்கலைக் கழகத்தின் இயக்குநர் டாக்டர் அரிஜித் முகர்ஜி கூறுகையில், எங்களுக்கு இயற்கை பூச்சி மருந்துகளின் தேவை அதிக அளவு இருக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இதை தயாரிக்க சிறிய அளவிலான தொழிற்சாலைகளுக்கு சிறந்த வாய்ப்பு உள்ளது.


ரசாயண உரம், பூச்சி மருந்துகள் பயன்படுத்தாமல் செய்யும் இயற்கை வேளாண்மைக்கு முக்கியத்துவம் அதிகரித்து வருகிறது. இதில் பயன்படுத்தப்படும் இயற்கை உரம், பூச்சி மருந்துகள் சுற்றுச் சூழலுக்கு ஏற்றது. எவ்வித தீங்கும் இல்லாதது.

இவ்வகை பூச்சி மருந்துகள் பயிர்களை பூச்சி தாக்குதலில் இருந்து பாதுகாக்கும் திறன் கொண்டது. இவை சுற்றுச் சூழலுக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை. நிலத்தடி நீர், மண் வளத்திற்கும் பாதிப்பு ஏற்படுத்துவதில்லை என்று டாக்டர் அரிஜித் முகர்ஜி தெரிவித்தார்.


இதன் எதிர்கால திட்டம் பற்றி டாக்டர் அரிஜித் முக்ரஜி கூறுகையில், இந்த பூச்சி மருந்து தயாரிப்பதன் மூலம், இதை பஞ்சாப் மாநிலத்தில் உள்ள விவசாயிகள் பயன்படுத்த ஊக்குவிக்கப்படும். இதன் மூலம் பஞ்சாப்பில் சுற்றுச் சூழல் பாதிப்பு இல்லாத விவசாயம் மேற்கொள்ளப்படும்.


இந்த வருடம் ஜீலை, ஆகஸ்ட் ஆகிய இரண்டு மாதங்களில் 22 டன் வேப்பங் கொட்டை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதிலிருந்த பூச்சி மருந்து தயாரிக்கப்பட்ட பிறகு, பல்கலைக் கழகத்தை சுற்றியுள்ள கிராமங்களில் விவசாயிகளின் கூட்டம் நடத்தப்படும். இதில் பல்கலைக் கழக ஊழியர்கள், ரசாயண உரத்தை பயன்படுத்துவதால் நிலத்தடி நீர், மண் வளம், உணவு தானியங்களுக்கு ஏற்படும் பாதிப்பு பற்றி விளக்குவார்கள்.


இவர்களுக்கு இயற்கை பூச்சி மருந்து பயன்படுத்த வேண்டிய முக்கியத்துவம் பற்றி விழிப்புணர்வு உண்டாக்குவார்கள். இதே போல் பல்கலைக் கழகத்திலும் விவசாயிகளின் கூட்டங்கள் நடத்தி விளக்கப்படும் என்று தெரிவித்தார்.

18 நவ., 2007

மக்கிய தொழு உரம் தயாரித்தல்

தொழு உரம் தயாரிக்க 15 அடி நீளம், 8 அடி அகலம், 3 அடி ஆழம் என்ற அளவில் குழி வெட்ட வேண்டும்।


குழியில் அடுக்கடுக்காக சாணக்குப்பையை போட வேண்டும்.

முதல் அடுக்கில் முக்கால் அடி உயரத்திற்கு சாணக்குப்பையை போடவேண்டும். அன்றாடம் சேரும் சாணக்குப்பையை கொஞ்சம் கொஞ்சமாக இந்த குழியில் சேகரித்து வரலாம்.

முக்கால் அடி உயரத்திற்கு சாணக்குப்பையை வந்ததும், அதன் மேல் கால் அடி அளவு மண் போட்டு நிரப்ப வேண்டும்.

மண்ண போட்டு முடித்ததும், இரண்டாவ அடுக்கு ஆரம்பிக்க வேண்டும்.

இரண்டாவ அடுக்கில் முக்கால் அடி சாணக்குப்பையை போட்டு அதன் மேல் கால் அடி அளவு மண் போடவேண்டும்.
இரண்டாவ அடுக்க அமத்த பிறகு குழியில்மீதம் ஒரு அடி இருக்கும்.

இதில் மூன்றாவ அடுக்கு சாணக்குப்பையை போட்டு, கால் அடி மண் போடவேண்டும். குழி தரமட்டத்திற்கு நிரம்பிவிடும். குப்பை மக்க ஆரம்பித்தம் அடுக்குகள் இறங்கிவிடும். இதனால் பள்ளம் ஏற்படும். இத தடுக்க மேலும் தரமட்டத்திற்கு மேல் 1 அடி உயரம் மண் போடவேண்டும்.

மண் மேட்டின் மீது தண்ணீர் தெளித்து மெழுகிவிடவேண்டும். இது ஆறு மாதத்தில் நன்றாக மக்கிவிடும்.

வெட்டிப்பார்த்தால் கருகருவென மக்கிய தொழு உரம் காணப்படும்.

தொழு உரத்திலுள்ள சத்துகள் :

0.4-1.5 சதவிகிதம் தழைச்சத்து
0.3-0.9 சதவிகிதம் மணிச்சத்து
0.3௧.9 சதவிகிதம் சாம்பல் சத்து

நன்றி :http://www.indiagriline.com/

18 அக்., 2007

தென்னை நார்க் கழிவு உரம்

நோக்கம்:-
தேங்காய் மட்டைகளில் இருந்து கயிறு தயாரிக்கும் ஆலைகளில் இது கழிவு பொருளாக கிடைக்கிறது. சராசரியாக 10,000 தேங்காய் மட்டைகளில் இருந்து 1 டன் கழிவு கிடைக்கும்.
இவை சாலை ஓரங்களில் குவிக்கப் பட்டு சுற்றுப்புற கேட்டை ஏற்படுத்துகிறது. இதனை பயனுள்ள இயறகை உரமாக மாற்றி வயல்களுக்கு பயன்படுத்தலாம்.

ஏன் மக்கவைக்க வேண்டும்?.
தென்னை நார்க் கழிவினை ஆலைகளில் இருந்து வரும் வடிவத்திலேயே நேரடியாக வயலில் இட்டால் எளிதில மக்காது. மேலும் இக்கழிவில் அதிக அளவு கார்பன் உள்ளதால் வயலில் மக்கும் போது காரபன்-டை-ஆக்சைடு உண்டாகும். இவை வயலில் ஏற்கனவே உள்ள தழைச்சத்தை (நைட்ரஜன்) அமோனியம் கார்பனேட்டாக மாற்றுகிறது. அமோனியம் கார்பனேட்ட் எளிதில் சிதைந்து அமோனியாவாகவும், காரபன்-டை-ஆக்சைடாகவும் மாறி காற்றில் கலந்துவிடுகிறது. இதனால் மண்ணின் தழைச்சது அளவு குறைந்துவிடும். எனவே இதனை மக்கவைத்து பயன்படுத்த வேண்டும்

மக்க வைத்தல்:-
தென்னை நார்க் கழிவினை ‘ புளுரோட்டஸ்’ காளானை கொண்டு மக்கவைப்பதால் விரைவாக (30 நாளில்) கார்பன் அளவு குறைந்துவிடும். மேலும் தழை மற்றும் சாம்பல் சத்துகளின் அளவு தொழுவுரத்தை விட இரு மடங்காக உயர்ந்து சிறந்தா இயற்கை உரமாக மாறுகிறது.

மக்க வைக்கும் முறை:-
தென்னை நார்க் கழிவு உரம் தயாரிக்க 1 டன் தென்னை நார்க் கழிவிற்கு 5 கிலோ யூரியா, 5 புட்டி புளுரோட்டஸ் (சிப்பிக் காளான் ) காளான் வித்தும் தேவை.
நிழலடியில் 15 சதுர மீட்டர் (5 × 3 மீட்டர்) பரப்பளவுள்ள தரையை சம்மாக சீர்படுத்தி 100 கிலோ தென்னை நார்க் கழிவை சீராக பரப்பவும்.
அதன் மீது 1 புட்டி புளுரோட்டஸ் (சிப்பிக் காளான் ) காளான் வித்தினை தூவிவிட வேண்டும்.
பிறகு அதன் மீது அடுத்து 100 கிலோ தென்னை நார்க் கழிவை சமமாக பரப்பவும்.
பிறகு அதன் மீது 1 கிலோ யூரியாவை தூவிவிட வேண்டும்
அதன் மீது அடுத்து 100 கிலோ தென்னை நார்க் கழிவை சமமாக பரப்பவும்.
மீண்டும் அதன் மீது 1 புட்டி காளான் வித்தினை தூவிவிட வேண்டும்.
இவ்வாறு அடுத்தடுத்து 10 அடுக்கு (10 × 100 கிலோ = 1 டன் ) தென்னை நார்க் கழிவை சமமாக பரப்பவும்
பிறகு அதன் மீது நன்றாக தண்ணீர் தெளித்து ஓரு மாதம் வரையிலும் மக்கச்செய்ய வேண்டும்.
கணிசமான ஈரத்தை (சுமார் 200%) தொடர்ந்து பராமரித்து வருதல் அவசியம்.
மக்கிய தென்னை நார்க் கழிவின் கொள்ளளவு பாதியாக் குறைவதோடு பழுப்பு நிறத்திலிருந்து கரும் பழுப்பாக மாறி விடும்.
மக்கிய தென்னை நார்க் கழிவினை உடனேயோ அல்லது சேமித்து வைத்தோ பயன்படுத்தலாம்

கவனிக்க வேண்டியவை:-
1. மக்க வைக்கும் இடம் தாழ்வான பகுதியாக இருக்கக் கூடாது.
2. மக்க வைக்கும் இடத்தில் நிழல் இருக்க வேண்டும்
3. நார்க் கழிவை அடுக்கும் போது ஈரம் இல்லாவிடில் தண்ணீர் தெளித்து அடுக்க வேண்டும்
4. .மக்கும் காலமான 30 நாட்களிலும் நார்க் கழிவில் 200% ஈரம் இருக்க வேண்டும்.
5. 1 டன் நார்க் கழிவை மக்க வைக்க 5 புட்டி புளுரோட்டஸ் (சிப்பிக் காளான் ) காளான் வித்து பயன்படுத்த வேண்டும்.
6. நார்க் கழிவை மக்க வைக்கும் போது, காளான் வித்து, யூரியா ஆகிய எல்லாவற்றையும் ஒன்ளு சேர்த்து கலக்கிவிடக் கூடாது.

தென்னை நார்க் கழிவின் பயன்
• மண்ணின் கரிம்ப்பொருளை அதிகரிக்கிறது.
• இது தன்னுடைய எடையை போல் ஐந்து மடங்கு நீரை ஈர்த்து வைக்க கூடியது.
• தோட்டங்களில் மண்ணிலுள்ள நீரைத் தக்கவைத்துக் கொள்ள இதை போர்வையாக இடலாம்.
• களர், உவர் மற்றும் நல்ல நிலங்களுக்கும் தென்னை நார்க் கழிவு நல்ல பலன் கொடுக்கும்.
• மண்ணிலுள்ள நுண்ணுயிர்களின் செயல் திறனை அதிகரித்து மண்வளத்தை காக்கிறது.
• மண்ணிலுள்ள மேல் இருக்கத்தை சரி செய்கிறது.
• களைகளைக் கட்டுப்படுத்துகிறது.

எனவே அதிக விலைக்கு விற்கும் இரசாயன உரத்தினை தவிர்த்து வீணாகும் தென்னை நார்க் கழிவை உரமாக்கி பயன்பெறுவோம்.

தகவல் ஆதாரம் : பயிர்ப் பாதுகாப்பு மையம்
தமிழ் நாடு வேளாண் பல்கழைக் கழகம்.

29 செப்., 2007

மண் புழு உரம் தயாரிப்பு



வயல் வெளி என்னும் இந்த வலை பதிவின் மூலம் வேளாண் தகவல்களைத் தரம் முதல் முயற்சிக்கு வலையுலக நண்பர்களின் ஆதரவை வேண்டுகிறேன்.


மண் புழு உரம் தயாரிப்பு

கழிவுகள் என்பன நாம் முறையாக பயன்படுத்த தவறிய மூலப்பொருள்கள் ஆகும்। பொதுவாக வேளாண் கழிவுகள், கால்நடை கழிவுகள் போன்றவற்றை ஒரே இடத்தில் குவித்து வைக்கும் பொழுது கெட்ட நாற்றம் ஏற்படுகிறது। ஆனால் அவற்றில் இருந்து அதிக அளவிலான இயற்கை எருவை உருவாக்க முடியும்। இந்த மதிப்புள்ள மூலப்பொருள்களை முறையாக மட்கவைப்பதின் மூலம் நமக்கு மதிப்பூட்டப்பட்ட எரு கிடைக்கிறது। இவ்வாறு அங்ககக் கழிவுகளை மக்கவைத்து வளம் குன்றிய மண்ணை பேணிக்காப்பதே மண்புழு உரத்தின் முதன்மையான பயனாகும்।


உள்ளுர் இரக மண்புழுக்களைக் கொண்டு மண்புழு உரம் தயாரித்தல்உலக அளவில் சுமார் 2500 மண்புழு இனங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இதில் 500 வகை இனங்கள் இந்தியாவில் உள்ளன. வெவ்வேறு மண்வகைக்கு ஏற்ப மண்புழு உரங்கள் மாறுபடும். எனவே மண்புழு உரம் தயாரிக்க அந்தந்த மண்ணிற்கு ஏற்ற மண்புழுக்களை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் இல்லை. இந்தியாவில் பெரியோனிக்ஸ் எக்ஸ்கவேடஸ் மற்றும் லேம்பீட்டோ மெளருட்டி என்ற இரு இனங்களை பயன்படுத்துகிறோம். மண்புழுக்களை வளர்ப்பதற்கு, குழிகளையோ, தொட்டிகளையோ அல்லது வளைவான கட்டமைப்புகளையோ பயன்படுத்தி கொள்ளலாம். எவ்வாறு உள்ளூர்ரக மண்புழுக்களை தேர்வு செய்யமுடியும்? 1. மண்ணின் மேற்பரப்பில் தென்படக்கூடிய, புழுக்களின் ஆக்கிரமிப்புள்ள மண்ணை கண்டறிய வேண்டும். 2. 500 கிராம் வெல்லம் மற்றும் ஒரு கிலோ மாட்டுச்சாணம் ஆகிய இரண்டையும் 2 லிட்டர் தண்ணீரில் கரைத்து 1 மீ ஜ் 1 மீ பரப்பளவில் மண்ணின் மேல் தெளிக்க வேண்டும். 3. வைக்கோல் கொண்டு மூடிவிட்டு பின்பு அதன் மேல் கோணிப்பை வைத்து போர்த்த வேண்டும். 4. 20௩0 நாட்களுக்கு தண்ணீர் தெளிக்க வேண்டும். 5. அந்த இடத்தில், மண்புழுக்கள் மேற்பரப்பில் அதிக அளவில் வரத்தொடங்கும். அவற்றை சேகரித்து பயன்படுத்திக் கொள்ளலாம்.

எரு-குழி தயாரித்தல் எரு-குழி தயாரிப்பதற்கு பல முறைகள் இருந்தாலும், நாம் நம் வசதிக்கேற்ற வடிவமைப்பில், வீட்டின் பின்புறத்திலோ, தோட்டத்திலோ அமைக்கலாம்। செங்கற்கள் கொண்டு ஒரு குழி, இரு குழி அல்லது வசதிக்கேற்ற அளவிளான தொட்டிகள் போன்றவற்றை முறையான நீர் வெளியேற்றக் குழாய்களுடன் அமைக்க வேண்டும்। வேளாண் கழிவுகள் மற்றும் இதர பொருட்களின் கொள்ளவைக் கொண்டு தொட்டிகளின் அளவை தீர்மானம் செய்ய வேண்டும். தொட்டிகளின் சுவரின் நடுவில் சிறு குழிகளில் நீர் தேக்கம் செய்வதன் மூலம் புழுக்களை எறும்பு தாக்கத்தில் இருந்து காப்பாற்ற முடியும்.நான்கு அறை தொட்டி / குழி முறைநான்கு அறை தொட்டிகளின் மூலம் புழுக்கள் ஒரு அறையில் இருந்து மற்றொரு அறைக்கு எளிதாக செல்கின்றன. இதன் மூலம், புழுக்கள் ஒரு அறையில் உள்ள கழிவுகள் நன்கு மட்கியவுடன், மற்றொரு அறைக்கு சென்று கழிவுகளை மட்கச் செய்கின்றன.மண்புழு படுக்கை தயாரித்தல்• மண்புழு படுக்கைஅடிப்பாகத்தில் சிறு கல் மற்றும் மணலின் (5 செமீ உயரம்) மேல் சுமார் 15௨0 செமீ உயரத்திற்கு ஈரப்பதத்துடன் கூடிய வண்டல் மண் பரப்பப்பட்ட படுக்கை அமைக்க வேண்டும்.• வண்டல் மண்ணின்் மீது மண்புழுக்களை விட்டவுடன், அவை மண்புழு படுக்கையை தன் சொந்த இருப்பிடம் போல் எண்ணுகின்றன. குழி 2 மீ ஜ் 1 மீ ஜ் 0.75 செமீ என்ற அளவிலும், மண்புழு படுக்கை 15 - 20 செமீ என்ற அளவிலும் அமைய வேண்டும்.• கையளவு மாட்டுச்சாணத்தை படுக்கையின் மீது தூவ வேண்டும். பின்பு 5 செமீ உயரத்திற்கு வெட்டிய வைக்கோலையோ அல்லது இயற்கை கழிவுகளையோ இட வேண்டும். அடுத்த 30 நாட்களுக்கு தேவைப்படும்போதெல்லாம் நீர் தெளித்து ஈரப்பதத்துடன் வைத்துக்கொள்ள வேண்டும்.• படுக்கை வறண்டோ அல்லது சொதசொதப்பாகவோ இருக்கக்கூடாது. பறவைகளிடம் இருந்து காக்க தென்னை அல்லது பனை ஓலைகள் அல்லது கோணிப்பைகள் கொண்டு மூடி வைக்க வேண்டும்.

• வெப்பத்தை இழுக்கும் தன்மையுடையது என்பதால் பிளாஸ்டிக் பைகளை உபயோகிக்கக் கூடாது. 30 நாட்கள் கழித்து ஈரப்பதமுடைய தாவர அல்லது கால்நடை கழிவுகளை, சமையலறை, உணவகம், வயல் போன்ற இடங்களில் இருந்து சேகரித்து அவற்றை சீர் செய்து 5 செமீ அளவிற்கு நிரப்ப வேண்டும். இவ்வாறு வாரம் இருமுறை செய்ய வேண்டும். இயற்கை கழிவுகளை மண்வெட்டி கொண்டு முறையே கலக்கிவிட வேண்டும்.

• சரியான அளவு ஈரப்பதத்தை பராமரிக்க, முறையாக நீர் தெளிக்க வேண்டும். வானிலை வறட்சியாக இருந்தால் அடிக்கடி நன்றாக நீர் தெளிக்க வேண்டும்.எப்பொழுது எரு தயாராகும்?

1. அடர்-காப்பி நிறத்தில், பொடியாக, குருணையாக, எடைகுறைவாக, துளைகள் நிரம்பிய மெல்லிய மண் அடுக்கமைப்புடன் இருக்கும் தருணமே தொழுஉரம் தயார் நிலையில் இருக்கும் தருணம் ஆகும்.
2. 60 - 90 நாட்களில் (குழி அல்லது தொட்டியின் அளவை பொருத்து) தொழு எரு தயாராகி விடும். புழுக்களின் கூடுகளைப் பார்த்து, குழியிலிருந்து தொழு எருவை அறுவடை செய்யலாம்.
3. புழுக்களை தொழு எருவிலிருந்து எளிதாகப் பிரித்து எடுக்க, எரு எடுக்கும் 2 நாட்களுக்கு முன்பிருந்து நீரிடுவதை நிறுத்த வேண்டும். இதனால் 80 சதவீத புழுக்கள் படுக்கையின் அடிப்பகுதிக்குச் சென்றுவிடும்.
4. மேலும் புழுக்களை சல்லடை அல்லது வலைகள் கொண்டும் பிரித்து எடுக்கலாம். புழுக்களும், தடிமனான பொருட்களும் வலையின் மீது நின்று விடும். இதனை குழியில் கொட்டி திரும்பவும் பயன்படுத்தலாம். மட்கிய உரம் மண்வாசனை போன்ற மணம் உடையது. முழுமையாக மக்காமல் இருந்தால் அதிலிருந்து கெட்ட வாடை வரும். இது நுண்ணுயிரின் செயல்பாடு முடிவடையாமல் நடந்து கொண்டிருக்கிறது என்பதை தெளிவாக்கும். புளித்த வாடை வந்தால், அது பூஞ்சாணம் மற்றும் அதிக வெப்பத்தின் அறிகுறி ஆகும். இதனால் தழைச்சத்து இழப்பு நேரிடும். இவ்வாறு இருப்பின், நல்ல காற்றோட்டம் ஏற்படுத்தி, நாறு போன்ற பொருட்களை சேர்த்து உலர்த்த வேண்டும். பின்பு மட்கிய எருவை சல்லடை கொண்டு சலித்து எடுக்க வேண்டும்.
5. சேகரித்த பொருட்களை சூரிய ஒளியில் குவித்து வைக்க வேண்டும். இதனால் புழுக்கள் குளிர்ச்சியான அடிப்பகுதிக்கு சென்றுவிடும்.
6. இரு அறை அல்லது நான்கு அறை குழியில் நீரிடும் போது, முதல் அறைக்கு நீரிடுவதை நிறுத்தி விடவேண்டும். இதம் மூலம் புழுக்கள் தானாகவே ஒரு அறையிலிருந்து மற்றொரு அறைக்கு செல்கின்றன. இவ்வாறு செய்வதால் சுழற்சி முறையில் தொடர்ச்சியாக எருவை அறுவடை செய்ய முடிகிறது.மண்புழு மட்கு உரத்தின் பயன்கள்• இயற்கை கழிவுகளை, மண்புழுக்களைக் கொண்டு மட்க வைப்பதன் மூலம், நல்ல கட்டமைப்புடன் கூடிய, நச்சுத்தன்மையற்ற நல்ல மதிப்பூட்டமுள்ள எரு கிடைக்கிறது.

• பயிர் வளர்ச்சிக்கு தேவையான கணிமப்பொருள்களையும் நுண்ணூட்டங்களையும் பயிர்களுக்கு எளிதில் கிடைக்கச் செய்து நல்ல கலப்பு உரமாக செயல்படுகிறது.

• தொழுஉரம், மண்ணில் உள்ள நோய் பரப்பக்கூடிய நுண்ணுயிர்களை குறைத்து விடுகிறது.
• பொருளாதார ரீதியாக குறைவாக நிலையில் உள்ள மக்களுக்கும், சமுகத்தின் கீழ்தட்டில் உள்ள மக்களுக்கும், மண்புழு தயாரித்தல் ஒரு சிறந்த குடிசைத் தொழிலாக அமைந்து அவர்களின் வாழ்க்கைக்கு கூடுதல் வருமானத்தை அளிக்கிறது.
• ஒவ்வொரு கிராமத்திலும், வேலையில்லாத இளைஞர்களையும் பெண்களையும் இணைத்து கூட்டுறவு சங்கங்கள்அமைத்து, மண்புழு உரம் தயார்செய்யலாம். மேலும் அவர்களே விலை நிர்ணயம் செய்து கிராம விவசாயிகளுக்கு விற்பனை செய்து ஒரு புதுமை படைக்கலாம்.
இதன் மூலம் இளைஞர்கள் நல்ல வருமானம் பெறுகின்றனர். அதோடுமட்டுமல்லாமல் நல்ல தரமான தொழுஉரத்தை அளித்து ஒரு நல்ல நீடித்த வேளாண்மை தொழில் செய்ய ஊக்குவிக்கிறது.





http://www.indg.in/agriculture/on-and-off-farm-enterprises/n20211bf-ao2039-ioa3k2c6iTM/ என்ற இணையதளத்திலிருந்து