மத்திய அரசின் கதர் கிராமத்தொழில்கள் ஆணையம் - கிராமப்புற வேலை வாய்ப்புத் திட்டம்
தகுதியுடைய திட்டங்கள்
இந்தத் திட்டம் கிராமப் புறங்களில் புதியதாக அமைக்க வாய்ப்புள்ள அனைத்து கிராமத்தொழில் திட்டங்களுக்கும் பொருந்தக் கூடியதாகும்.
தகுதியான தொழில்கள்
116 வகையான தொழில்கள் கீழே தரப்பட்டுள்ளது. மேலும் நடத்தக் கூடாத தொழில்கள் என்பதையும் (நெகடிவ் திட்டங்கள்) தனியாக கொடுக்கப்பட்டுள்ளன.
வங்கிக் கடனின் நிலையான முதலீட்டில் அதிக பட்சம் ஒவ்வொரு ரூ.50,000/- க்கும் குறைந்தது ஒரு நபருக்கு வேலை வாய்ப்பும் அளித்தல் வேண்டும்.
பல்வேறு வகையான கிராமத் தொழில்கள்
தாதுப் பொருள்கள் சார்புத் தொழில்கள் பற்றிய அட்டவணை
1. மண்பாண்டம் தயாரித்தல்
2. கிளிஞ்சல் மற்றும் சுண்ணாம்பு
3. கல்வெட்டுதல், ஜல்லி அரைத்தல், செதுக்குதல் (கட்டிடம் மற்றும் கோயிலுக்கு)
4. கல்லில் செய்யப்படும் பயன்பாட்டுப் பொருட்கள்
5. சிலேட்டு மற்றும் சிலேட்டுப் பென்சில் செய்தல்
6. பிளாஸ்டர் ஆப் பாரிஸ் தயாரித்தல்
7. பாத்திரம் கழுவும் பவுடர்
8. எரி பொருளாகப் பயன்படும் கரி
9, தங்கம், வெள்ளி மற்றும் விலையுயர்ந்த செயற்கை கற்களால் செய்யப்படும் ஆபரணங்கள்
10. கோலப்பொடி
11. வளையல்
12. பெயிண்ட், வார்னிஷ், டிஸ்டம்பர் மற்றும் கலர் பொடிகள்
13. கண்ணாடிப் பொம்மைகள்
14. கண்ணாடி அலங்காரத் தொழில்
15. செயற்கை வைரம் கட்டிங்
வனம் சார்ந்த தொழில்கள்
16. தேனீ வளர்த்தல்
17. கத்தாழை வளர்த்தல்
18. பசை, பிசின் தயாரித்தல்
19. அரக்குத் தயாரித்தல்
20. மூங்கில் கூடை செய்தல்,
21. விளக்குமாறு, வெட்டிவேர் தட்டி செய்தல்
22. வன விளை பொருட்கள் சேகரித்தல், பதனிடுதல்
23. போட்டோ பிரேம்
24. நெட்டி வேலை. நெட்டி மாலைகள் செய்தல்
25. இலையினால் செய்யப்படும் கிண்ணங்கள்
26. வனத்திலிருந்து கிடைக்கும் மூலிகைச்செடிகள் சேகரித்தல்
கையால் செய்த காகிதம் மற்றும் நார்ப்பொருட்கள்
27. கைக்காகிதம்
28. காகிதத்தினால் செய்யப்படும் தட்டு, கிண்ணம் பை மற்றும் அட்டை பெட்டிகள்
29. புத்தக பைண்டிங் கவர், நோட்புக் செய்தல்
30. சணற் பொருட்கள் (நூல் தவிர)
31. கயிறு மற்றும் நார்பொருட்கள்
வேளாண் சார்ந்த உணவுப் பொருட்கள் / சார்புத் தொழில்கள்
32. அரிசி, பருப்பு மற்றும் தானியங்கள் பதனிடுதல் / மசாலா பவுடர் / அப்பளம் / ரொட்டி பேக்கரி பொருட்கள் செய்தல்
33. இடியாப்பம்
34. சமையல் எண்ணெய் தயாரித்தல்
35. கோதுமை, ரவை தயாரித்தல்
36. சிறிய ரைஸ் மில்
37. பனை பொருட்கள் / பனை வெல்லம்
38. கரும்பு வெல்லம் / கண்டசாரி சர்க்கரை செய்தல்
39. மிட்டாய், தின்பண்டம் தயாரித்தல்
40. கரும்புச்சாறு செய்தல்
41. கேழ்வரகு, மக்காச்சோளப் பொருட்கள் தயாரித்தல்
42. முந்திரிப்பருப்பு தயாரித்தல்
43. பால்பொருட்கள் தயாரித்தல்
44. மாட்டுத் தீவனம் / கோழித் தீவனம் தயாரித்தல்
பாலிமர் மற்றும் ரசாயண சார்புத் தொழில்கள்
45. தீப்பெட்டி
46. அகர்பத்தி
47. பட்டாசு
48. தோல் பதனிடுதல்
49. சோப்பு தயாரித்தல்
50. ரப்பர் பொருட்கள்
51. ரெக்ஸின்
52. பி.வி.சி. பொருட்கள்
53. கொம்பு, எலும்பு, தந்தப் பொருட்கள்
54. மெழுகுவர்த்தி, சூடம் மற்றும் அரக்கு
55. பிளாஸ்டிக் பொருட்கள்
56. பொட்டு தயாரித்தல்
57. மருதாணி தயாரித்தல்
58. வாசனைத் தைலம் தயாரித்தல்
59. ஷாம்பு தயாரித்தல்
60. ஹேர் ஆயில்
61. டிடர்ஜெண்ட், சலவை பவுடர்
பொறியியல் மற்றும் மரபு சாரா எரிசக்தி
62. தச்சுவேலை
63. இரும்பு வேலை
64. அலுமினியப் பாத்திரங்கள்
65. சாண எரிவாயு
66. கழிவுப் பொருட்கள் மூலம் இயற்கை உரம் உற்பத்தி செய்தல்
67. பேப்பர் பின், ஸ்டவ் பின், ஊக்கு, கிளிப்புகள் தயாரித்தல்
68. அலங்கார பல்புகள், கண்ணாடிக்குடுவைகள் மற்றும் கண்ணாடி
69. குடை தயாரித்தல்
70. சூரிய ஒளி மற்றும் காற்றினால் இயங்கும் கருவிகள்
71. பித்தளைப் பாத்திரங்கள்
74. பாத்திரம் இல்லாத பித்தளை, செம்பு, வெண்கலப் பொருட்கள்
75. ரேடியோ
76. கேஸட் பிளேயர் ரேடியோவுடன்/ரேடியோ இல்லாமல்
77. வோல்டேஜ் ஸ்டெபிலைசர்
78. எலக்ட்ரானிக் கடிகாரம் மற்றும் அலாரம் கடிகாரம்
79. கேஸட் ரெக்கார்டர் ரேடியோவுடன்/ரேடியோ இல்லாமல்
80. மரத்தினால் செய்யப்படும் அழகுப் பொருட்கள்
81. தகரப் பொருட்கள்
82. வயர் நெட்
83. இரும்பு கிரில்
84. மோட்டார் வைண்டிங்
85. வண்டி, மாட்டு வண்டி, சிறிய படகுகள் தயாரித்தல், சைக்கிள், சைக்கிள் ரிக்ஷா, மோட்டார் பொருத்தப்பட்ட வண்டிகள் அசெம்பிளிங்
86. இசைக்கருவிகள் தயாரித்தல்
ஜவுளி தொழில் (கதர் நீங்கலாக) மற்றும் பிற தொழில்கள்
87. பாலிவஸ்திரா
88. லோக்வஸ்திரா
89. பனியன்
90. ரெடிமேட் துணிகள் தயாரித்தல் / டெய்லரிங்
91. பொம்மை தயாரித்தல்
92. சாயம் / சாய அச்சுத் தொழில்
93. கம்பளி மற்றும் நூல்கண்டுகள்
94. எம்பிராய்டரி
95. மருத்துவத் துறைக்கானபேண்டேஜ்கள்
96. ஸ்டவ் திரிகள்
97. எம்பிராய்டரி செய்யப்பட்ட துணிகள்
98. லாண்டரி / சலவையகம்
99. பார்பர் / முடித்திருத்தகம்
100. பிளம்பிங்
101. வீட்டில் பயன்படும் எலக்ட்ரானிக் பொருட்கள் பழுதுபார்த்தல்
102. டயர் வல்கனை சிங்
103. பம்ப்செட், டீசல் எஞ்சின் பழுதுபார்த்தல்
104. விவசாயப் பொருட்களுக்கான ஸ்பிரேயர், பூச்சி மருந்து பம்ப்செட்டுகள் பழுதுபார்த்தல்
105. ஒலி, ஒளி அமைப்புகளுக்கான ஒலி பெருக்கி, ஆம்பிளிபையர், மைக் போன்றவை வாடகைக்கு விடுதல்
106. பேட்டரி சார்ஜ் செய்தல்
107. பேனர் / கலைத்தட்டிகள் வரைதல்
108. சைக்கிள் ரிப்பேர் கடை
109. கட்டிட வேலைகள்
110 பேண்ட் வாசிக்கும் குரூப்கள்
111. மோட்டார் பொருத்தப்பட்ட நாட்டுப் படகுகள் (பைபர் கிளாஸ்)
112. வாடகைக்கு விடப்படும் மோட்டார் சைக்கிள்
113. இசைக்கருவிகள்
114 உணவகம் (மதுபானம் நீங்கலாக)
115. தேனீர் விடுதி
116. அயோடின் கலந்த உப்பு
குறிப்பு: வரிசை எண். 111, 112, 113 - கோவா மாநிலத்திற்கு மட்டும்
கே. வி. ஐ. சி. திட்டத்தின் கீழ் தகுதி பெறாத தொழில்கள்
நெகடிவ் திட்டங்கள் (மார்ஜின் தொகைத் திட்டத்தில் சாராதவை)
கதர் கமிஷன் தேசப்பிதா மகாத்மா காந்தியடிகளால் அவரது கொள்கைகளுக்கு இணங்க தொடங்கப்பட்டது. எனேவ சில திட்டங்கள் காந்தீயக் கொள்கைகளுக்கு முரணானவை எனக் கருதப்படுபவை ஏற்புடையதல்ல. கீழ்காணும் திட்டங்கள் மார்ஜின் தொகை திட்டத்தில் சேர்க்கப்படாதவையாகும்
அ) இறைச்சி பதப்படுத்துதல், பீடி, சிகரெட், பீடா, மதுபான வகைகள் விநியோகிக்கும் சிற்றுண்டி, புகையிலை, கள்ளு தயாரித்தல் சம்மந்தபட்ட தொழில்கள்
ஆ) தேயிலை, காபி, ரப்பர் முதலியவை பயிரிட, பட்டுப் பூச்சி வளர்த்தல், தோட்டக் கலை, பூக்கள் பதனிடுதல், விலங்குகள் பராமரித்தல், பன்றி, கோழி, மீன் வளர்த்தல் முதலானவை.
இ) சுற்றுப்புறச் சூழலுக்கு பங்கம் ஏற்படுத்தும் தொழில்கள்
20 மைக்ரானுக்கு குறைவான தடிமன் உள்ள பாலிதீன் பைகள் தயாரித்தல், மறுசூழற்சி முறையில் உபேயாகிக்க முடியாத பிளாஷ்டிக் பொருட்கள் மற்றும் ஏனைய சுற்றுச் சூழல் கெடுதல் ஏற்படுத்தும் தயாரிப்புகள்.
கடன் பெற தகுதியுடையவர்கள்
இத்திட்டத்தின் கீழ் கடன் பெற கீழ்க்காணுபவர்கள் தகுதியுடையவர் ஆவர்.
தனி நபர்கள் / பதிவு பெற்ற நிறுவனங்கள் / கூட்டுறவுச் சங்கங்கள் / டிரஸ்ட் மற்றும் தொண்டு நிறுவனங்கள் மற்றும் சுய உதவிக் குழு போன்றவை ஆகும்.
கடன் தொகை
மேலே குறிப்பிட்டுள்ள அனைத்துப் பிரிவினருக்கும் அதிகபட்ச தேவையான ரூ. 25,00,000/- வரை வேலை வாய்ப்பிற்கிணங்கி தேசிய வங்கியின் மூலம் கடனாக வழங்கப்படும்.
(தனியார் / பொது நிறுவன கம்பெனி, கூட்டாளிகள், இணைந்த கடனாளிகள் போன்றோருக்கு இத்திட்டத்தில் தகுதியில்லை)
கிராமப் பகுதி
“கிராமப் பகுதி” என்பது மொத்த மக்கள் தொகை 20,000க்கு குறைவாக இருப்பின், அது வருவாய் கிராமத்தின் கீழ் / நகரப் பஞ்சாயத்து / நகரியம் ஆக இருப்பின் இத்திட்டத்தில் பலன் பெற முடியும்.
1. மாநில அரசின் ஆணையின் கீழ் ஏதாவது பகுதி வருவாய் கிராமத்தின் பிரிவில் வந்தால் தகுதியுடையதாகும்.
2. மேலும் நகரப் பகுதியாக இருந்து, அந்த நகரின் மக்கள் தொகை 20,000/- க்கு குறைவாக இருப்பின் தகுதியுடையதாகும் (1991 சென்சஸ்).
விளிம்புத் தொகை
பொது பிரிவினருக்கு ரூ.10,00,000/- வரையிலான திட்டத் தொகையில் 25 சதவீதம் கே.வி.ஐ.சி யினால் உதவித் தொகையாக (மார்ஜின் தொகை) வழங்கப்படும்.
ரூ.10 லட்சம் முதல் 25 லட்சம் வரையான வங்கிக் கடனுக்கு 10% மான்யம் வழங்கப்படும். (அதிகபட்ச மான்யம் ரூ.4,00,000)
பெண்கள், சிறுபான்மையினர், உடல் ஊனமுற்றோர், இராணுவத்தில் இருந்து ஒய்வு பெற்றோர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தாழ்த்தப்பட்டோர், மலை ஜாதியினர் ஆகியேருக்கு ரூ.10 லட்சம் வரையிலான திட்டத்தொகையில் 30% மார்ஜின் தொகை கிடைக்கும். 10 லட்சத்திற்கு அதிகமாகவும் ரூ.25 லட்சம் வரையிலான திட்டத்தொகையில் 10% மார்ஜின் தொகை வழங்கப்படும். (அதிகபட்ச மானியம் ரூ.4,50,000).
கடன் பெறுபவர் செலுத்தும் தொகை
பொது பிரிவினர் இத்திட்டத்தின் கீழ் திட்டத்தொகையில் 10 சதவீதம் சுயமாக முதலீடு செய்யவேண்டும். கடன் பெறுபவர் பெண் / எஸ்.சி/ எஸ்.டி/ ஓ.பி.சி மற்றும் நலிந்த பிரிவினராக இருப்பின் திட்டத் தொகையில் 5 சதவீதம் முதலீடு செய்ய வேண்டும்.
கடன் அளவு
தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் பொதுப்பிரிவின் கீழ் கடன் பெறுபவராக இருப்பின் திட்டத்தொகையில் 90 சதவீதம் ஒப்புதலும் மற்றும் நலிந்த பிரிவினர் / நிறுவனமாக இருப்பின் 95 சதவீதம் ஒப்புதலும் அனைத்து முழுகடன் தொகையையும் வழங்கவேண்டும்.
ஒரு சுற்று செயல்முறைக்கடன் திட்டத்தொகையில் சேர்த்துக் கொள்ளலாம். ஆனால் நிலம் வாங்குதல் திட்டத்தில் சேர்க்கக்கூடாது. இத்திட்டத்தின் கீழ் ஒரு குடும்பத்தில் ஒரு நபர், ஒரு முறை மட்டும் பயன் பெறலாம்.
விளிம்புத் தொகையை ஈடுகட்டுதல்
கோட்ட கதர் கிராமத் தொழில்கள் அலுவலகம், மதுரையில் குறிப்பிட்ட 17 தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளின் கிளைகளில் விளிம்புத் தொகையினை மொத்தமாக சேமிப்புக் கணக்கில் கே.வி.ஐ.சி. பெயரில் டெபாசிட்டாக வைத்துள்ளது. வங்கி கிளைகளில் கடன் உதவியில் முதல் தவணை அளிக்கப்பட்ட பிறகு மார்ஜின் தொகைக்கு தகுதி பெற்ற தொகையை 2 ஆண்டு கால நிலை வைப்பு என கடன் பெறுபவர் பெயரில் கடன் வழங்கப்பட்ட கிளையிலேயே வைப்பு நிதியாக வைக்கப்படும்.
கடன் வழங்கி 2 ஆண்டுகள் முடிந்த பின்பு அந்நபரின் வங்கிக் கடன் கணக்கில் வரவு வைக்கப்படும்.
திட்டத்தின் கீழ் கடன் வழங்கும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள்
தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள்
1. கனரா வங்கி
2. இந்தியன் வங்கி,
3. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா
4. ஆந்திரா வங்கி
5. விஜயா வங்கி
6. பேங்க் ஆப் இந்தியா
7. யூனியன் பாங்க் ஆப் இந்தியா
8. பாங்க் ஆப் பரோடா
9. சிண்டிகேட் வங்கி
10. பஞ்சாப் நேஷனல் பேங்க்
11. ஓரியண்டல் பேங்க் ஆப் காமர்ஸ்
இதர முக்கிய விபரங்கள்
1. மொத்த திட்ட மதிப்பீடு ரூ.25.00 லட்சத்திற்குள் இருத்தல் வேண்டும்.
2. ஏற்கனேவ செய்து கொண்டிருக்கும் தொழிலுக்கோ அதனை விரிவாக்கம் செய்யவோ திட்டத்தில் மானியம் வழங்கப்படமாட்டாது.
3. மொத்த திட்ட மதிப்பீட்டில், சுய முதலீடு 50%க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
4. தொழில் தொடங்குவோருக்கு கல்வித் தகுதி வயது வரம்பு கிடையாது.
5. மூலதனக்கடனுக்கும் சேர்த்து மானியம் வழங்கக்கூடிய ஒரே திட்டம் இது.
மேலும் விவரங்களுக்கு
ஊரக தொழில்கள் ஆலோசனை சேவை மையம்
கோட்ட அலுவலகம்
கதர் கிராமத் தொழில்கள் ஆணையம்
(சிறு குறுந்தொழில் அமைச்சகம், இந்திய அரசு)
10, புறவழிச்சாலை, மதுரை - 10
போன் 0452 - 2386792
ஆதாரம் இந்திய முன்னேற்ற நுழைவாயில்
வேலைவாய்ப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வேலைவாய்ப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
21 நவ., 2008
27 பிப்., 2008
தேசிய ஊரக வேலைவாய்ப்பு சட்டம்
விவசாய வேலைகளற்ற காலங்களில் ஊரக மக்கள் இடம் பெயர்தலை தடுத்து அவர்களுக்கு வருடத்திற்கு 100 நாட்களுக்கு, அதிக நுணுக்கமில்லாத திறமை தேவைப்படாத வேலைவாய்ப்பு அளிக்க இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் குறைந்த பட்ச கூலியில் நீர் சேமிப்பு, நில மேம்பாடு, வறட்சியை எதிர்கொள்வற்கான முயற்சிகள் போன்ற திட்டங்களில் வேலை வாய்ப்பு அளிக்கப்படும்.
இத்திட்டத்தை பிரதமர் டாக்டர். மன்மோகன்சிங் பிப்ரவரி 2, 2006 ஆம் ஆண்டு துவங்கி வைத்தார்.
தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்திரவாதத் திட்டத்தின் முக்கிய அம்சங்கள்
· வறுமைகோட்டிற்கு கீழ் வாழ்வோருக்கு மட்டுமல்லாமல் கிராமங்களில் வசிக்கும் அனைவருக்கும் நுணுக்கமில்லா வேலைவாய்ப்பு அளிப்பதற்கு, அனைவரையும் பதிவு செய்தல் வேண்டும்.
· விண்ணப்பித்த 15 நாட்களுக்குள் அவர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய வேலைவாய்ப்பு அட்டை வழங்கப்பட வேண்டும்.
· வேலை அட்டை வைத்திருப்போருக்கு வேலை தேவைப்படும் எனில் அவர்களது தேவையை ஏற்று வேலைவாய்ப்பை 15 நாட்களுக்குள் அளிக்க வேண்டும்.
· நீர் மற்றும் நில வளம் காத்தல், காடுவளர்ப்பு, நீர் சேமிப்பு, நில மேம்பாடு போன்ற வேலைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.
· இதில் 50% வேலைவாய்ப்பை கிராம ஊராட்சிகளே அமல்படுத்த வேண்டும்.
· கிராமத் திட்டங்களை கிராமசபா பரிந்துரை செய்தபின் ஜில்லா பஞ்சாயத்து அதனை அங்கீகரிக்க வேண்டும்.
· தரகர்களையோ அல்லது இயந்திரங்களையோ பயன்படுத்தக்கூடாது.
· வேலையாட்கள் அதிகம் தேவைப்படுகின்ற பணிகளை தேர்ந்தெடுத்து, 60% கூலியில் வேலையை மேற்கொள்ள வேண்டும்.
· 15 நாட்களுக்குள் பணம் பட்டுவாடா செய்ய வேண்டும். மாநில அரசு வேளாண் பணிகளுக்கு பரிந்துரை செய்துள்ள குறைந்த பட்ச கூலியை கடைபிடிக்க வேண்டும்.
· தமிழ்நாடு, ஆந்திரபிரதேசம், கேரளா போன்ற மாநிலங்கள் பணப்பட்டுவாடா செய்வதற்கு வங்கிகளையும், தபால் நிலையங்களையும் பயன்படுத்துகின்றன.
மேலும் விபரங்களுக்கு http://www.nrega.nic.in/ என்ற இணையதளத்தை அணுகவும்।
இச்சட்டத்தின்படி யாரெல்லாம் வேலைக்கு விண்ணப்பிக்க முடியும்?
கிராமப்புறங்களில் வசிக்கும் வயது வந்த குடும்பத்தினர் அனைவரும் விண்ணப்பிக்கலாம். இச்சட்டத்தின் கீழ், ஏற்கனவே வேலையில் இருந்தாலும், அல்லது தற்பொழுது வேலை செய்துகொண்டிருந்தாலும், திறன் தேவைப்படாத வேலை கேட்க உரிமை உண்டு.
பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மேலும் இச்சட்டத்தின் கீழ் 33 சதவீத வேலையை பெண்களுக்கு கொடுக்க வேண்டும்.
தனியொருவரின் விண்ணப்பம் வேலைக்கு ஏற்றுக்கொள்ளப்படுமா?
ஆம். வேலை வேண்டுவோர் குடும்பவாரியாக பதிவு செய்யப்படுவர். இருப்பினும், ஒரு குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களும் 100 நாட்கள் வேலை வாய்ப்பிற்கு தங்களை பதிவு செய்யலாம்.
எவ்வாறு ஒருவர் விண்ணப்பிக்கமுடியும்?
வேலைக்கு தங்களை ஏற்கனவே பதிவு செய்து வேலை அட்டை வைத்திருப்போர், வேலை வாய்ப்பு பெற, வேலை வேண்டி ஒரு தனி கடிதம் வரைந்து கிராம பஞ்சாயத்திற்கோ அல்லது அவ்வொன்றியத்தின் திட்ட அலுவலருக்கோ அனுப்ப வேண்டும். மேலும் விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்ட தேதியையும் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும்.
ஒரு வருடத்தில் எத்தனை நாட்களுக்கு ஒருவர் வேலைவாய்ப்பு பெறமுடியும்?
ஒவ்வொரு குடும்பத்தினரும் ஒரு வருடத்தில் 100 நாட்களுக்கு வேலை பெறலாம். இந்த 100 நாட்கள் வேலையை ஒவ்வொரு குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களும் பகிர்ந்து கொள்ள வேண்டும். வேலைக்காலம் தொடர்ச்சியாக 14 நாட்களாவது இருக்கவேண்டும். ஆனால் ஒரு வாரத்திற்கு 6 நாட்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
எப்பொழுது ஒருவருக்கு வேலை கிடைக்கும்?
விண்ணப்பம் கொடுத்த 15 நாட்களுக்குள்ளோ அல்லது வேலை கேட்ட முதல் நாளில் இருந்தோ வேலை கொடுக்கப்படும்.
வேலையை யார் வழங்குவார்கள்?
கிராம பஞ்சாயத்து அல்லது திட்ட அலுவலர் இருவரில் எவரிடம் வேலை வேண்டப்பட்டதோ அவர் வாயிலாக வேலை வழங்கப்படும்.
ஒருவருக்கு வேலை அளிக்கப்படும் என்பதை எவ்வாறு அவர்கள் அறியமுடியும்?
கிராமப் பஞ்சாயத்தோ அல்லது திட்ட அலுவலரோ, விண்ணப்பித்தவர்களுக்கு, எப்பொழுது, எங்கு வேலை அளிக்கப்படும் என்ற செய்தியை கடிதம் மூலம் அனுப்பவேண்டும். கிராம பஞ்சாயத்து மற்றும் திட்ட அலுவலர் அலுவலகங்களில் உள்ள செய்தி பலகையில் வேலை நடைபெறவிருக்கும் இடம், தேதி மற்றும் வேலைவாய்ப்பு பெறவிருப்போரின் பெயர்கள் போன்ற தகவல்கள் ஒட்டப்படும்.
வேலைக்கான கடிதம் கிடைத்தவுடன் விண்ணப்பித்தோர் என்ன செய்யவேண்டும்?
வேலை அட்டையுடன், வேலை நியமனம் செய்யப்பட்ட இடத்திற்கு, வேலை நடக்கவிருக்கும் நாளன்று செல்ல வேண்டும்.
ஒருவர் வேலை அளிக்கப்பட்ட தேதியில் வேலைக்குச் செல்லாவிட்டால் என்ன நடக்கும்?
கிராம பஞ்சாயத்து மற்று திட்ட அலுவலர் குறிப்பிட்ட 15 நாட்களுக்குள் அவர்கள் வேலைக்கு செல்லாவிட்டால், வேலையில்லாதோருக்கு அளிக்கப்படும் சலுகைகளில் இருந்து விலக்கப்படுவர்.
அவர்கள் மறுமுறை வேலைக்கு விண்ணப்பிக்க முடியுமா?
ஆம். விண்ணப்பிக்கலாம்
ஒருவருக்கு என்ன கூலி கிடைக்கும்?
மாநில அரசு வேளாண் தொழிலாளர்களுக்கு நியமனம் செய்துள்ள குறைந்த பட்ச கூலி அளிக்கப்படும்.
எவ்வாறு கூலி வழங்கப்படும்? தினக்கூலியா அல்லது வேலைப்பளுவை பொருத்தா?
இருவழிகளிலும் அளிக்கப்படும். வேலையின் அளவை மதிப்பிட்டு கூலி கொடுக்கப்பட்டால், 7 மணி நேரம் வேலை செய்வோருக்கு குறைந்த பட்ச கூலி கொடுக்க வேண்டும்.
எப்பொழுது கூலி வழங்கப்படும்?
வாரத்திற்கு ஒருமுறையோ அல்லது வேலை செய்த 14 நாட்களுக்குள்ளோ வழங்கப்பட வேண்டும். கூலிப்பணத்தில் ஒரு பகுதியை நாள் கூலியாகவும் வழங்கலாம்.
என்னென்ன வசதிகளை வேலையாட்களுக்கு அளிக்க வேண்டும்?
பாதுகாப்பான குடிநீர், குழந்தைகளுக்கு நிழல், ஓய்வெடுப்பதற்கு இடம், முதலுதவி பெட்டி போன்ற வசதிகள் செய்துதரப்படவேண்டும். வேலை செய்யும்போது ஏற்படும் சிறு காயங்களுக்கான மருந்துகளையும், ஏனைய சுகாதாரத்திற்கான அவசர சிகிச்சைக்கான மருந்துகளையும் முதலுதவிப்பெட்டியில் வைத்திருக்க வேண்டும்.
வேலை எங்கு அளிக்கப்படும்?
வீட்டிலிருந்து 5 கிலோ மீட்டருக்குள் வேலை நடைபெறும். 5 கிலோ மீட்டருக்கு மேல் தூரம் இருந்தால் அவர்களுக்கு, போக்குவரத்திற்காக 10 சதவீதம் அதிகமாக பணம் வழங்கப்படும். மேலும், வயதானவர்களுக்கும், பெண்களுக்கும் கிராமத்திற்கு அருகிலேயே வேலை செய்வதற்கு முன்னுரிமை அளித்து வேலைகொடுக்கப்படும்.
வேலையாட்களுக்கு அளிக்கப்படும் சலுகைகள் என்ன?
விபத்து ஏற்பட்டால்
வேலை செய்யும் போது ஏதாவது விபத்து நேர்ந்தால், அவர்களுக்கு மாநில அரசின் இலவச சிகிச்சை கிடைக்கும்.
காயம் அடைந்தவர் மருத்துவமனையில் இருந்தால்
காயம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தால், அவர்களுக்கு மருந்துகள், சிகிச்சை, தங்கும் வசதி போன்றவை இலவசமாக கொடுக்கப்படும். மேலும் 50 சதவீதம் கூலிக்கு குறையால் பணம் கொடுக்கப்படும். வேலை செய்யும் இடத்தில் விபத்தின் காரணமாக இறப்போ அல்லது நிரந்தர ஊனமோ ஏற்பட்டால் இறந்தவரின் வாரிசுக்கோ அல்லது ஊனம் ஏற்பட்டவருக்கோ, மத்திய அரசு குறிப்பிட்டபடி ரூ. 25,000 தொகை வழங்கப்படும்.
தகுதி பெற்றவர்களுக்கு வேலை அளிக்கப்படாவிட்டால் என்ன நடக்கும்?
வேலை வேண்டி விண்ணப்பித்த, வேலைக்கு தகுதியான ஒருவருக்கு 15 நாட்களுக்குள் வேலை கிடைக்காவிட்டால், அவருக்கு வேலைவாய்ப்பு இல்லாதோருக்கான சலுகைகள் வழங்கப்படவேண்டும்.
சலுகைகளின் வீதம்
ஒரு குடும்பத்தாருக்கு கொடுக்கப்பட்ட வேலைநாட்களில் முதல் 30 நாட்களுக்கு 25 சதவீதம் கூலியும், அதற்கு மேல் 50 சதவீதம் கூலியும் கொடுக்க வேண்டும்.
எந்த வகையான வேலைகளை கொடுக்க வேண்டும்?
நீண்டநாள் தாங்கும் நீடித்த சொத்துக்கள் ஏற்படுத்துதல்
இத்திட்டத்தின் முக்கிய நோக்கம், ஊரக ஏழை மக்களுக்காக நீடித்த நிலையான சொத்துக்களை உருவாக்கி அவர்களின் வாழ்க்கையை வளமாக்குவதாகும்.
தரகர்கள் மூலம் மேற்கொள்ளப்படும் வேலைகளுக்கு அனுமதி இல்லை
இத்திட்டத்தின் கீழ் செய்ய வேண்டிய வேலைகள் ஒன்றன்பின் ஒன்றாக
நீர்வள பாதுகாப்பு மற்று நீர் சேமிப்பு
வறட்சி எதிர்ப்பு திறன் ஏற்படுத்துதல், காடு வளர்ப்பு, மரம் நடுதல்
நீர்பாசன வாய்க்கால், நுண்பாசனம், சிறுபாசனம் போன்ற வேலைகள்
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பினைச் சேர்ந்த மக்களுக்கும், இந்திய அரசின் இந்திரா-அவாஸ் யோஜனா திட்டத்தின் சலுகை பெறுவோருக்கும், நீர்ப்பாசன வசதி அளித்தல்
ஏரிகளை தூர்எடுத்தல் போன்ற ஏனைய பழங்கால நீர் நிலைகளை புதுப்பிக்கும் வேலைகள்
நில மேம்பாடு
நீர் தேங்கும் பகுதிகளில் வடிகால் வசதி அமைத்து வெள்ளத்தில் இருந்து பாதுகாத்தல்
அனைத்து தட்பவெப்ப நிலைகளிலும் கிராமங்களை இணைத்தல். சாலைகள் அமைத்து, தேவைப்படும் இடங்களில் சிறுபாலங்கள் அமைத்தல் மற்றும், கிராமங்களின் உள்பகுதிகளிலும் தேவையான இடங்களில் சிறுபாலங்கள் அமைத்தல்
மத்திய அரசு மாநில அரசுடன் கலந்து ஆலோசித்த மற்ற பணிகளும் இதனுள் அடங்கும்.
திட்டத்தில் பணியாற்றுவோரின் சேவைகள் எவ்வாறு கண்காணிக்கப்படும்?
உள் மற்றும் வெளி மதிப்பீட்டாளர்களைக் கொண்டு இத்திட்டத்தின் பொறுப்பாளர்கள் மேற்கொள்ளும் பணிகள், தொடர்ச்சியாகவும், இடையிலும் மதிப்பீடு செய்யப்படும். கிராம சபாக்கள் மூலம் பணிகள் அனைத்தும் கணக்கீடு செய்யப்படும். கிராம அளவில் காவல் கண்காணிப்பாளர்கள் அமைக்கப்படுவர். இத்திட்டத்தில் ஏதேனும் முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டால் இதில் சம்பந்தப்பட்டோருக்கு 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். மேலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் ‘குறை தீர்க்கும் மையங்கள்’ உருவாக்கப்படும்

இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)