29 ஜூன், 2012

நீர்பாசனம்


சொட்டுநீர் பாசனம்

சொட்டுநீர் பாசன முறை என்பது முதன்மை குழாய், துணை குழாய் மற்றும் பக்கவாட்டு குழாய் ஆகிய அமைப்புகள் வாயிலாக பயிர்களுக்கு தேவையான நீரை, அதன் வேர்ப்பகுதிக்கே வழங்கும் ஒரு மேம்பட்ட நீர்ப்பராமரிப்பு முறை. ஓவ்வொரு விடுகுழாய்/உமிழி மற்றும் புழைவாய், பயிர்களுக்கு தேவையான நீர், ஊட்டச்சத்து மற்றும் வளர்ச்சிக்குத் தேவைப்படும் பொருள்களை, பயிர்களின் வேர் பகுதியில், நேராக அளந்து அளிக்கிறது,
உமிழி வழியாக நீர் மற்றும் ஊட்டச்சத்தானது, வேர் பகுதியில் இருக்கும் மண்ணில், புவி ஈர்ப்பு மற்றும் நுண்புழை சக்தி மூலம் உள்ளே செல்கிறது. நீர் மற்றும் ஊட்டச்சத்தை எடுத்துக்கொண்ட உடனேயே, பயிர் நீர் நெருக்கடியிலிருந்து தவிர்க்கப்பட்டு, தரம் மேம்பட்டு போதுமான வளர்ச்சி மற்றும் அதிக மகசூல் கிடைக்க வழிவகுக்கிறது.
மாதிரி சொட்டுநீர்ப்பாசன வடிவமைப்பு

நீர் (மனிதனுக்கு இயற்கையின் வரப்பிரசாதம்), மிக வேகமாக குறைந்து கொண்டுவரும் நிலையில், சொட்டு நீர் பாசனம், இன்றைய முக்கியமான தேவையாகும்.
சொட்டுநீர் பாசனத்தின் நன்மைகள்
  • மகசூலை 150 % அதிகப்படுத்தும்
  • சாதாரண பாசனத்தை ஒப்பிடுகையில், 70% நீரை இப்பாசனத்தின் மூலம் சேமிக்கலாம். அவ்வாறு சேமித்த நீரைக் கொண்டு இன்னும் அதிகமான நிலங்களுக்கு பாசனம் அளிக்கலாம்.
  • பயிர் திடமாகவும் ஆரோக்கியமாகவும் வளர்வதோடு, வேகமாக முதிர்ச்சி அடையும்
  • விரைவாக முதிர்ச்சி அடைவதால் குறைந்த காலத்தில் முதலீட்டுக்கான வரவு கிடைத்து விடும்
  • உரம் பயன்பாட்டு திறனில் 30% அதிகம்
  • உரம், ஊடுபணி மற்றும் ஆட்களுக்காக ஆகும் செலவும் குறைக்கப்படும்
  • நீரில் கரையும் உரத்தை குழாய்கள் மூலமே கொடுக்கலாம்.
  • ஏற்ற இறக்கம் உடைய நிலங்கள், உப்பு நிலம், நீர்தேங்கும் நிலம் மணற்பாங்கான மற்றும் மலை பகுதிகள் அனைத்தையும் இப் பாசனத்தின் கீழ் கொண்டுவந்து சாகுபடி செய்யலாம்
தெளிப்பு நீர் பாசனம்
தெளிப்புநீர் பாசனம் என்பது, நீரை மழைபோல பயிர்களுக்கு வழங்கும் பாசனமாகும். மோட்டார் மூலம் நீரை பைப்புகள் மற்றும் தெளிப்பான் மூலம் தெளிக்கச் செய்து, வயல் முழுவதும் பாசனம் செய்யப்படும். தெளிப்பான் மூலம் தெளிக்கச் செய்வதனால், நீர் சிறு சிறு துளிகளாக மாறி நிலத்தில் விழும்.
   
இப்பாசனத்தின் மூலம், சிறிய மற்றும் பெரிய நிலங்களை மிகச்சுலபமாக பாசனம் செய்யலாம். பல்வேறு வெளியேற்று திறன் கொண்ட தெளிப்பான்கள் கிடைப்பதால், எல்லாவிதமான நிலங்களுக்கும் ஏற்ற பாசன திட்டமாகும்.
இப்பாசன முறையானது, கோதுமை, கொண்டகடலை, பயிறு, காய்கறிகள், பருத்தி, சோயா, தேயிலை, காப்பி, தீவனப்பயிர்கள் ஆகிய அனைத்து பயிர்களுக்கும் ஏற்றது ஆகும்.
தகவல்: ஜெயின் இரிகேஷன் சிஸ்டம்ஸ் லிமிடேட், ஜல்கான்வ்

1 கருத்து:

Unknown சொன்னது…

விவசாயம் தான் நம் நாட்டின் முதுகெலும்புனு சொல்றாங்க, ஆனா அரசாங்கம் விவசாயிகளின் வளர்ச்சிக்காக ஒன்னும் செய்றது இல்ல மேலும் விவரங்களுக்கு Latest Tamil News