24 நவ., 2007

கருப்புத் தங்கம் காட்டாமணக்கு

தமிழகத்தின் பழமை வாய்ந்த மூலிகைச் செடியான இந்த கருப்புத் தங்கம் இந்தியத் திரு நாட்டில் குறிப்பாக தமிழ் நாட்டில் அதிக அளவில் பயிரிடப்படுகிறது. சிறு உழவர் முதல் பல பொரிய தனியார் நிறுவனங்கள் வரை இதன் முக்கியத்துவம் அறிந்து அதிக அளவில், தனியாகவும், ஒப்பந்த முறையிலும் பயிரிட முன்வந்துள்ளனர். இதனை தனிப்பயிராகவும், வேலிப்பயிராகவும், கலப்புப் பயிராகவும், இறவைப் பயிராகவும்,மானாவாரிப் பயிராகவும் வசதிக்கேற்ப பயிர் செய்யலாம்.

இவ்வளவு பெருமை உடைய அந்த கருப்புத் தங்கம் எதுன்ன அத நம்ம “ காட்டுக் கொட்டான் “ தானுங்க. இதன் பால் பல்வலி, வாதவலி, ஒற்றைத் தலைவலி போன்ற நோய்களை குணமாக்கும். மேலும் இதிலிருந்து பயோ டீசல் எனப்படும் திரவ எரிபொருள் தயாரிக்கப் படுகிறது. இதை சாகுபடி நல்ல பயன் பெறலாம்.

காட்டாமணக்கு சாகுபடி தொழில் நுட்பங்கள்
காட்டாமணக்கு ஒரு புதர் செடி. இதை ஆங்கிலத்தில் ஜட்ரேப்பா (JATROPHA) என்று அழைப்பார்கள். இதை ஒரு முறை நடவு செய்தால் 30 ஆண்டுகள் வரை தொடர்ந்து விளைச்சல் கொடுக்கக் கூடியது. இது சுமார் 2 மீட்டர் உயரம் வளரக் கூடியது. இதை கால் நடைகள் உண்பதில்லை. இதன் இலைகள் அகலமாகவும் கரும் பச்சை நிறத்திலும் இருக்கும். இதன் விதைகளை பறவைகளும் உண்பதில்லை. ஓரளவு வறட்ச்சியைத் தாக்குப் பிடித்து வளரக்கூடியது.

காட்டாமணக்கு பயிரிடுவதன் பயன்கள்

• காட்டாமணக்கு விதையிலிருந்து பயோ டீசல் எனப்படும் திரவ எரிபொருள் கிடைக்கிறது.
• விலை வீழுச்சி இல்லாத நிரந்தர வருமானத்தைக் கொடுக்கக்கூடியது.
• நாட்டின் பொருளாதார தற்சார்பை ஏற்படுத்தும்.
• கிராமப்புறங்களில் வேலை வாய்ப்பை உருவாக்கும்.
• குறைந்த நீர் கொண்டு வளரக்கூடியது.
• இதிலிருந்து தயாரிக்கப்படும் திரவ எரிபொருள் சுற்றுச்சூழலை மாசுபடுத்தாது.

காட்டாமணக்கு எண்ணையின் பயன்கள்

காட்டாமணக்கு விதையிலிருந்து 30 சதம் திரவ எரிபொருளும் மீதி 70 சதம் புண்ணாக்கும் கிடைக்கிறது.
இந்த திரவ எரிடிபாருளை சுத்தப்படுத்தி டீசலுக்கு மாற்றாக இயந்திரங்களில் பயன் படுத்தலாம்.
• இதன் புண்ணாக்கை இயற்கை உரமாக வேளாண்மைக்குப் பயன்படுத்தலாம்.
• எண்ணையை சுத்தப்படுத்தும்பொது கிடைக்கும் கிளிசரால் என்ற உபரிப்பொருளை மருந்துகள் மற்றும் அழகுச்சாதனப் பொருள்கள் தயாரிக்கப் பயன்படுத்தலாம்.

தமிழகத்தில் பயிர் செய்யயக் கூடிய வகைகள்

உலகளவில் காட்டாமணக்கில் 476 வகைகள் உள்ளன. இந்தியாவில் 12 வகைகள் உள்ளன. இவற்றுள் ஜட்ரேப்பா குர்காஸ் என்னும் வகை தான் உலகளவில் எண்ணைக்காக சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைகழகத்தில் மேட்டுப்பாளையம் வனக்கல்லூரியில் தேர்வு செய்யப்பட்ட ஜட்ரேப்பா குர்காஸ் என்ற உயர் விளைச்சல் ரகங்களைப் பயன்படுத்தலாம். இந்த ஜட்ரேப்பா குர்காஸ் விதைகளை மடகாகஸ்கர், ஜிப்ம்பாவே தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்தும் பயன்படுத்தலாம்.

சாகுபடிக்கேற்ற பருவங்கள் &மண் வகைகள்

காட்டாமணக்கை பருவ மழைக்காலத் தொடக்கத்தில் (ஜூன்- ஜூலை மற்றும் டிசம்பர்-அக்டோபர்) நடவு செய்யலாம். களர், உவர் இல்லாத அனைத்து வகை மண்ணிலும் நன்கு வளரக் கூடியது. தமிழகத்தில் நீலகிரி மாவட்டத்தைத் தவிர அனைத்து மாவட்டங்களும் இப்பயிர் சாகுபடிக்கு உகந்தது.

விதையளவு, விதை நேர்த்தி

ஒரு ஏக்கரில் 2 X 2 மீட்டர் இடைடிவளியில் 1000 செடிகள்
நடவு செய்யலாம். ஒரு கிலே விதையில் சுமார் 2000 விதைகள் இருக்கும். விதை முளைப்புத் திறன் 50 முதல் 60 சதம் இருக்கும். எனவே ஒரு ஏக்கருக்கு ஒரு கிலோ விதை போதுமானதாகும். விதைகளை அறுவடை செய்த ஒரு மாதத்திலிருந்து முன்று மாதத்திற்குள் நாற்று உற்பத்திக்கு பயன்படுத்த வேண்டும். முன்று மாதங்களுக்கு மேல் ஆகும்போது முளைப்புத் திறன் வேகுவாகக் குறைந்துவிடும். விதைகளை பசும் சாணம் கலந்த நீரில் 12 மணி நேரம் ஊறவைக்க வேண்டும். பின்னர் ஈரக் கோணிப் பையில் 12 மணி நேரம் மூடி வைக்க வேண்டும். முளை வெளி வந்த விதைகளை பாலித்தீன் பைகளில் விதைப்பதற்குப் பயன் படுத்தலாம்.

நாற்றுக்கள் தயாரிப்ப்பு

விதைகளை 10 X 20 செ.மீ பாலித்தீன் பைகளில் செம்மண், மணல், எரு ஆகியவற்றை 1:1:1 விகிதத்தில் கலந்து நிரப்பி நடவுக்குப் பயன்படுத்தலாம். பாலித்தீன் பைகளில் வடிகாலுக்காக அடிப்பாகத்தில் 4 துவாரங்கள் ஏற்படுத்த வேண்டும். முளைப்புக் கட்டிய விதைகளை 1 செ.மீ ஆழத்தில் படுக்கை வசமாக ஊன்ற வேண்டும். விதைகள் 10 நாட்களில் முளைக்கத் தொடங்கும்.
பூஞ்சாண நோய்கள் வராமல் இருக்க விதைப்பதற்கு முன்பு ஒரு சத போர்டோ கரைசல் அல்லது 0.2 சத காப்பர் ஆக்ஸிகுளோரைடு கரைசலை விதைப்பதற்கு
முன்பு பைகளில் ஊற்ற வேண்டும். இந்த நாற்றுப் பைகளை மாதத்திற்கு ஒரு முறை இடம் மாற்றி, வேர் மண்ணில் இறங்குவதைத் தவிர்க்க வேண்டும். 60 நாட்களில் நாற்றுக்கள் நடவுக்குத் தயாராகிவிடும். ஆறு முதல் எட்டு மாதங்களுக்கு நாற்றுகளைப் பைகளில் வைத்திருக்கலாம்.

நடவு வயல் தயாரிப்பு

தோட்டத்தைக் களைகளின்றி சமன்படுத்த வேண்டும். சட்டிக்கலப்பையால் ஒரு
முறையும், கொத்துக் கலப்பையால் ஒரு முறையும் உழவு செய்ய வேண்டும். பின்பு 2 X 2 மீட்டர் இடைவெளியில் 1 X 1 X 1அடி என்ற அளவில் குழிகள் எடுக்க வேண்டும். அந்தக் குழிகளில் 500 கிராம் தொழு உரம், 100 கிராம் சூப்பர் பாஸ்போட், 100 கிராம் வேப்பம் புண்ணாக்கை கலந்து இட்டு, நாற்றுக்களை நடவேண்டும்.

நாற்றுக்கள் நடவு

60 நாட்கள் வயதுடைய ஒரு அழ உயரமுள்ள நாற்றுக்களை நடவுக்குப் பயன்படுத்தலாம். பாலித்தீன் பைகளை எடுத்து விட்டு அந்த மண் உருண்டை கலையாமல் நடவு செய்ய வேண்டும். ஒரு குழிக்கு சூடோமோனஸ் 20 கிராம் இடவேண்டும். நடவு செய்த பின் செடியைச் சுற்றி நன்கு மிதித்து மண்ணை இறுகச் செய்ய வேண்டும்.

நீர் மற்றும் உர மேலாண்மை

செடிகளை நட்டவுடனும், மூன்றாம் நாளும் நீர்ப் பாய்ச்ச வேண்டும். மழை இல்லாதமாதங்களில் மாதம் இருமுறை நீர்ப்பாசனம் செய்வது அவசியம்.
இரண்டாவது ஆண்டு முதல் இதற்கு உரமிடுவது அவசியம். ஒரு செடிக்கு 20:120:60 என்ற விகிதத்தில் தழைச்சத்து, மணிச்சத்து மற்றும் சாம்பல் சத்துக்ளை இரண்டாகப் பிரித்து வருடத்தில் இரண்டு தவணைகளில் இடவேண்டும். நான்காவது ஆண்டிலிருந்து
இதோடு சேத்து மணிச்சத்தை மட்டும் 150 கிராம் அதிகப்படுத்திக்கொள்ளலாம்.
செடிகளை கவாத்து செய்த்தல் நட்ட செடிகள் ஒரு மீட்டர் உயரம் வளர்ந்தவுடன், வளரும் நுனியைக் கிள்ளிவிட வேண்டும். பக்கவாட்டில் வரும் கிளைகளின் நுனிகளையும் இரண்டாம் வருடம் இறுதிவரை கிள்ளிவிடவேண்டும். மூன்றாம் வருடம் தொடக்கத்தில் குறைந்த பட்சம் 25 பக்கக் கிளைகள் உள்ளவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். செடிகள் ஆறுமாதத்தில் பூக்க ஆரம்பித்துவிடும். பூக்கள் இருப்பினும் தளிர்களின் நுனிகளைக் கிள்ளி பக்கக் கிளைகளை ஊக்குவிப்பது அவசியம். செடியின் வளர்ச்சி அதிகமாகி கிளைகள் கீழ் நோக்கி வளைந்து வரத் தொடங்கும் தருணத்தில் (சுமார் 5 வருடங்களுக்குப் பிறகு) தரைமட்டத்திலிருந்து ஒரு அழ உயரம்விட்டு செடியை வெட்டி விட வேண்டும்.
வளர்ச்ச்சி ஊக்க்கி தெளிப்ப்பு
செடியில் பூக்கள் அபரிமிதமாக மலர ஜிப்ரலிக் அமிலத்தை 100 மி.கிராமை ஒரு லிட்டர் நீரில் கரைத்து (100பிபிஎம்) வருடத்திற்கு இருமுறை தெளிக்கலாம்.

ஊடுபயிர் சாகுபடி

முதல் இரண்டு வருடங்களில் செடிகளின் வரிசையின் இடையே தக்காளி, உளுந்து, பாகல், சாம்பல் பூசணி, பூசணி, வெள்ளரி ஆகிய பயிர்களை ஊடுபயிராக சாகுபடி செய்யலாம்.

பூச்ச்சி மற்றும் நோய் மேலாண்மை

பட்டை திண்ணி புதிய தளர்களின் பட்டையை சுரண்டி உண்ணும். இதைக்
கட்டுப்படுத்த எண்டோசல்பான் 3 மில்லி லிட்டரில் கலந்து தெளிக்க வேண்டும். இலை பிணைப்பான் என்ற பூச்சி வளரும் இலைகளைப் பின்னிப் பிணைந்து கூடாக மாற்றும். இதைக் கட்டுப்படுத்த எண்டோசல்பான் 3 மில்லியை ஒரு லிட்டரில் கலந்து தெளிக்கவேண்டும். தண்டு அழுகல் நோய் தாக்கப்பட்ட செடிகளின் தண்டின் அடிப்பாகத்தில் மண்ணொடு செருகின்ற இடத்தில் அழுகல் தோன்றும். தொடர்ந்து செடிகள் காய்ந்து விடும். இதைக் கட்டுப்படுத்த ஒரு சதம் பொர்டோ கரைசலை, செடியின் அடியில் தண்டினைச் சுற்றி மண்ணில் ஊற்றி நனைக்கவேண்டும்.

மகசூல்

பசும் காய்கள் முதிர்ந்தவுடன் மஞ்சள் நிறமாக மாறும். பின்புகாய்கள் காய்ந்து கருப்பு நிறமாக மாறிவிடும். ஒவ்வொரு காயிலும் மூன்று விதைகள் இருக்கும். வருடம் முழுவதும் பூத்துக் காய்க்கும் தன்மை கொண்டதால், மாதம் ஒரு முறை வருடந்தோறும் அறுவடை செய்யலாம். அறுவடை செய்யப்பட்ட காய்களை நன்கு உலர வைத்து காய்தொளிப்பான் முலம் விதைகளைப் பிரித்தெடுக்கலாம். பிரித்தெடுத்த விதைகளை உலரவைத்து கோணிப்பைகளில் சேமித்து வைக்கலாம். மூன்றாம் வருட இறுதியிலிருந்து ஒரு செடிக்கு சுமார் 3 கிலோ விதைகள் கிடைக்கும். ஒரு ஏக்கருக்கு 3000 கிலோ விதை உற்பத்தி செய்யலாம்.

மேலும் தகவலுக்கு
முதல்வர், வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்,
மேட்டுப்பாளையம்-641 301

முதல்வர், தொட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்,
கொயமுத்தூர்- 641 003
முதல்வர், வேளாண் பொறியியல் கல்லூரி, கோயமுத்தூர்- 641 003

தகவல் ஆதாரம் : இந்திய முன்னேற்ற நுழைவாயில் http://www.indg.in/ இணையதளத்திலிருந்து

2 கருத்துகள்:

செந்தில்நாதன் செல்லம்மாள் சொன்னது…

மிக அருமையான பதிவு.
ஆனால், இந்த பயிரிட்ட இடத்தில் வேரு எதுவும் பயிரிட முடியாத பட்டு போன இடமாகிவிடும் என்று கேள்விப் பட்டு இருக்கிரேன். அது உண்மையா????

செந்தில்நாதன் செல்லம்மாள் சொன்னது…

மிக அருமையான பதிவு.
ஆனால், இந்த பயிரிட்ட இடத்தில் வேரு எதுவும் பயிரிட முடியாத பட்டு போன இடமாகிவிடும் என்று கேள்விப் பட்டு இருக்கிரேன். அது உண்மையா????