12 ஜன., 2008

இனிய பொங்கல் வாழ்த்துக்கள்பொன் விளையும் பூமிக்கும்
பொன்னிறமாய் புலர்கின்ற பொழுதுக்கும்
நன்றி சொல்லும் நன்னாளாம்
நம் தமிழர் தைத் திருநாள்

உயிர்களிடம் அன்பு சொல்லி
உழைப்புக்கு நன்றி சொல்லி
பயிர் வளர்க்கும் உயர்குடியே
பழையன கழித்து புதியன புகுத்திடு

இன்நாளில் எரித்துவிடு
உன் உள்ளத்துக் குப்பைகளை
என்நாளும் எரிக்காமல் புதைத்துவிடு
சூழலுக்கு கேடு தரும் மாசுகளை

இல்லத்தை தூய்மை செய்து வெள்ளையடி
நல்லவைகள் செய்து செய்து
நம் மக்கள் நெஞ்சங்களே
நல்லபடி கொள்ளையடி

பச்சரிசி பொங்கலிட்டு பாசமுடன் அதை
பல்லுயிர்க்ககும் படையலிட்டு
பொங்கலோ! பொங்கல் ! என்று
மங்களமாய் மகிழ்ச்சி பொங்க முழக்கமிடு

மண்ணுக்கும் மழைக்கும்
மனதார நன்றி சொல்லு
மானுடம் முழுமைக்கும்
மகிழ்ச்சியோடு வாழ்த்துச் சொல்லு

கருத்துகள் இல்லை: