9 டிச., 2007

மின்சக்தியை சேமிப்போம்

தமிழகத்தின் மின் தட்டுபாட்டை போக்க நம்மாலான சிறு உதவி. மின்சக்தியின் உபயோகத்தைக் குறையுங்கள். செலவை மிச்சப்படுத்துங்கள் நாம் உபயோகப்படுத்தும் விளக்குகள், பல்புகள் மற்றும் எரிமின்சாதன வகைகள் மிக அதிகமாக மின்சாரத்தைச் செலவழிப்பதால் இந்தியாவில் குறைந்தபட்சம் 80% மின்சாரம் வீணாக்கப்படுகிறது.

சி.எஃப்.எல். (காம்பாக்ட் புளோரசண்ட் விளக்குள்) மிகக்குறைவான மின்சாரத்தை பயன்படுத்துவதால், மின்சார செலவைக் குறைக்கின்றன. அத்துடன் அதிக அளவு வெப்பத்தையும் வெளியிடுவதில்லை.

சி.எஃப்.எல். பற்றிய சில தகவல்கள்
ஒரு சி.எஃப்.எல். பல்பு, வழக்கமான பல்பைக் காட்டிலும் ஐந்து மடங்கு வெளிச்சத்தைத் தருகிறது
சிஎஃப்.எல். எரியும் நேரம் சாதாரண பல்பைவிட எட்டு மடங்கு அதிகம்
நீங்கள் 60 வாட்ஸ் சாதாரண பல்புக்கு பதிலாக 15 வாட்ஸ் சி.எஃப்.எல். பல்புகளை உபயோகித்தால், குறைந்தபட்சம் ஒரு மணிநேரத்திற்கு 45 வாட்ஸ் மின்சாரத்தை மிச்சப்படுத்த முடியும். ஒரு மாதத்திற்கு 11 யூனிட் மின்சக்தியைச் சேமிக்க முடியும். செலவையும் குறைக்க முடியும்.
சி.எஃப்.எல். பல்புகள் மூன்று முதல் 4 ஆண்டுகள்வரை எரிசக்தியை இழக்காமல் இருக்கும்.
விவரம்

பல்பின் விலை
60 வாட்ஸ் பல்புகள் ரூ. 10
15 வாட்ஸ் சி.எஃப்.எல் . ரூ. 116
சேமிப்பு -


வாட்ஸ்
60 வாட்ஸ் பல்புகள் 60
15 வாட்ஸ் சி.எஃப்.எல். 15
சேமிப்பு 45

எரியும் நேரம்60 வாட்ஸ் பல்புகள் 6 மாதங்கள், அதாவது 1000 மணிநேரம்
15 வாட்ஸ் சி.எஃப்.எல் . 4வருடங்கள் அதாவது 8000 மணிநேரம்

ஒரு வருடத்திற்கா மின்சார நுகர்வு

60 வாட்ஸ் பல்புகள் 115 யூனிட்
15 வாட்ஸ் சி.எஃப்.எல் 36 யூனிட்
சேமிப்பு 108 யூனிட்

ஒரு யூனிட் ரூ. 2.70 என்ற வீதத்தில் ஒரு வருடத்திற்கான செலவு
60 வாட்ஸ் பல்புகள் ரூ.396
15 வாட்ஸ் சி.எஃப்.எல் ரூ.99
சேமிப்பு ரூ.297

நான்கு வருடங்களுக்கான மொத்த செலவு
60 வாட்ஸ் பல்புகள் ரூ. 1624
15 வாட்ஸ் சி.எஃப்.எல் ரூ. 512
சேமிப்பு ரூ. 1112/


இதுபோன்று எரிசக்தியையும், மின்சாரத்தையும் நீங்கள் சேமித்தால், மின்சார வசதியே இல்லாத பல கிராமங்களுக்கு ஒளிதர முடியும்.


ஆதாரம்: ஆந்திரப் பிரதேச மரபு சாரா எரிசக்தி வளர்ச்சிக் கழகம் லிமிடெட்
மேலும் தகவலுக்கு
http://www.indg.in/rural-energy/technologies-under-rural-energy/energy-efficient-technologies/b0acooa3u-ake201af-ufe-aoo201ee2039-c-acs-aTM-cfl

கருத்துகள் இல்லை: