இண்-டி-ஜி (இந்தியா டெவலப்மெண்ட் கேட்வே) என்பது கிராமப்புறம் மற்றும் சமூக வளர்சிக்கான குறிப்பான தேவைகளை இலக்காக வைத்துச் செயல்படும் நாடு தழுவிய அளவில் நடக்கும் ஒரு முயற்சி. இந்த கேட்வே இந்தியாவின் தேசிய வலையகம். இதன்மூலம் தகவல்கள் மற்றும் சேவைகள் பற்றி அறியலாம். இதுவரையில் தொடர்பு எல்லைக்கு வெளியே இருக்கும் இந்திய கிராமப்புற சமூகங்களை, குறிப்பாக பெண்கள் மற்றும் ஏழைகளைச் சென்றடைவதுதான் இதன் நோக்கம்.
கிராமப்புறச் சமூகங்களுக்கு, குறிப்பாக ஒதுக்கப்பட்ட மக்கள் மற்றும் ஏழைகளுக்கு அவர்களுடைய உண்மையான, முக்கியமான தேவைகளுக்கான உற்பத்திப் பொருள்கள் மற்றும் சேவைகள் பற்றிய நம்பகமான தகவல்களை அவர்கள் மொழியிலேயே தருவதே கேட்வேயின் குறிக்கோள். அறிவுப் பகிர்வுக்காகத் தகவல் தொழில்நுட்பச் சாதனங்களைப் பயன்படுத்தி வளர்ச்சி காண இது வழிவகுக்கும்.
இந்த பன்மொழி வலைதளம் உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம் (சி. டாக) -்கின் ஐதராபாத் அலுவலகத்தால் செயலாக்கப்படுகிறது.
உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம் (சி. டாக்), இந்திய அரசின் தகவல் தொடர்பு மற்றும் தகவல் நுண்பொறி அமைச்சகத்தால் (முன்பு மின்னியல் துறை), 1988-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் தொடங்கப்பட்ட ஒர் அறிவியல் சங்கமாகும். மின்னியல் மற்றும் மேம்பட்ட தகவல் நுண்பொறி சம்பந்தமான துறையில், உருவாக்கம், மேம்பாடு மற்றும் அதன் பயன்பாடுகள் பற்றிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கழகமாக சி. டாக் செயல்பட்டு வருகிறது. தகவல் நுண்பொறி துறையில் இந்தியாவின் பெருமைகளில் ஒன்றான ‘பரம்’ அதிநவீன கணினிகள் சி. டாக்-ஆல் உருவாக்கப்பட்டவை. சி. டாக்கின் ஐதராபாத் அலுவலகம், மென்பொருள்-பாதுகாப்பு, மின்வழிக்கல்வி, பண்டமாற்று மேலாண்மை, இலவச மென்பொருள்கள் மற்றும் மென்பொருள் பொருந்திய கருவிகளின் பயன்பாடுகள் பற்றிய ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வருகின்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக