3 மார்., 2008

கந்து வட்டியும் கடன் தள்ளுபடியும்




நமது நாட்டின் விவசாயிகளை கடன் சுமையிலிருந்து மீட்க, கூட்டுறவு வங்கிகளிலிருந்து அரசு வங்கிகள் வரை சிறு, நடுத்தர விவசாயிகள் வாங்கியுள்ள கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும் என்று நிதி நிலை அறிக்கையில் அறிவித்திருப்பது மன மகிழ்ந்து வரவேற்கத்தக்கதுதான் என்றாலும், அது தொடரும் தற்கொலைகளைத் தடுக்குமா என்பதுதான் இன்னமும் பதில் காண முடியாத கேள்வியாகவுள்ளது. இரண்டு ஹெக்டேர் (5 ஏக்கர்) வரை நிலம் வைத்துள்ள சிறு, நடுத்தர விவசாயிகள் பெற்ற கடன்களை தள்ளுபடி செய்ய ரூ.50,000 கோடியும், இதர விவசாயிகள் பெற்றுள்ள கடன்களை தள்ளுபடி செய்ய ரூ.10,000 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனால் 4 கோடி விவசாயிகள் பலனடைவார்கள் என்று நிதி அமைச்சர் ப. சிதம்பரம் கூறியுள்ளார். இந்தக் கடன் தள்ளுபடி தங்களுக்குப் பயனளிக்கப் போவதில்லை என்று, விவசாயிகள் அதிகமாக தற்கொலைகள் செய்து கொள்ளும் மராட்டிய மாநிலம் விதர்பா பகுதி விவசாயிகள் கூறியுள்ளனர். கடன் சுமையால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் பெரும்பான்மையோருக்கு 5 ஏக்கருக்கும் அதிகமாகத்தான் நிலம் உள்ளது என்றும், நிதி நிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள வரையறையால் தங்களுக்கு அந்த நிவாரணம் கிடைக்கப் போவதில்லை என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.இது மிகவும் கவனிக்கத் தக்கதாகும். கடன் சுமையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்குள்ள நிலங்களின் அளவை கணக்கில் கொள்வதற்கு பதிலாக, அவர்கள் கடன் சுமையிலிருந்து விடுபட இயலாத காரணியை அடிப்படையாகக் கொண்டு - உதாரணத்திற்கு, விதர்பா பகுதியில் பாதிப்பிற்குள்ளான விவசாயிகள் பருத்தி பயிர் செய்து கடன் பட்டவர்கள் - கடன் நிவாரணம் அளிப்பது சரியாக இருக்கும்.

மராட்டியத்திலிருந்து ஆந்திரம் வரை கடன் சுமையிலிருந்து விடுபட வழியில்லாமல் தங்கள் உயிரை மாய்த்துக் கொண்ட விவசாயிகளில் பெரும்பான்மையோர் கந்து வட்டிக் கடன் பட்டவர்களாவர். மாதத்திற்கு 3, 5, 7 விழுக்காடு என்று சிறிய தொகையைப் பெற்று கடன் பட்டு, அதைக்கூட திருப்பிக் கட்ட முடியாமல் தூக்கில் தொங்கியவர்களே அதிகம்.விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு செத்த கணக்கை தேச குற்றப் பதிப்பு வாரியம் (National Crime Records Bureau - NCRB) வெளியிட்டதைத் தொடர்ந்து எழுதிய கட்டுரையில் (‌சிற‌ப்பு தூ‌க்கு ம‌ண்டல‌ம்) தமிழ்.வெப்துனியா.கா‌ம் குறிப்பிட்டிருந்தபடி, வேளாண் கூட்டுறவு வங்கிகளிலும், பொதுத் துறை வங்கிகளிலும் பெற்ற கடன்களை த‌ள்ளுபடி செ‌ய்வது மட்டுமின்றி, கந்து வட்டிக்குப் பெற்ற கடன்களை மாநில அரசுகள் அவசர சட்டம் இயற்றி ரத்து செய்ய வேண்டும் என்று எழுதியிருந்தோம்.ஏனெனில் கந்து வட்டிக்குப் பெற்ற கடன்களை ரத்து செய்யாமல், தங்களை மரண வேதனையில் அழுத்திக் கொண்டிருக்கும் கடன் சுமையிலிருந்து விவசாயிகளை மீட்க முடியாது.எனவே, மராட்டியம், ஆந்திரம், கர்நாடகம், சட்டிஷ்கர், மத்திய பிரதேசம் மாநில அரசுகள் அனைத்தும் கந்து வட்டி அனைத்தையும் ரத்து செய்யும் அவசர சட்டம் பிறப்பிக்குமாறு மத்திய அரசு உடனடியாக உத்தரவிடவேண்டும்.இதைச் செய்யவில்லையெனில், தற்கொலைகள் தொடர்கதையாவதை முழுமையாகத் தடுக்க இயலாது.


நன்றி; தமிழ்.வெப்துனியா.கா‌ம்

விவசாய கடன் தள்ளுபடி மற்றும் கடன் நிவாரணத் திட்டம், 2008


1. முகவுரை நிதியமைச்சர், தனது 2008-2009-க்கான வரவு-செலவு திட்டத்தில் (பட்ஜெட்), விவசாயிகளுக்காக கடன் தள்ளுபடி மற்றும் கடன் நிவாராணத் திட்டத்தை அறிவித்தார்.



இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான வழிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.




2. நோக்கங்கள் 2.1 இந்த திட்டத்தின் கீழ் குறு மற்றும் சிறு விவசாயிகளுக்கு, மற்றும் ஏனைய விவசாயிகளுக்கு, வர்த்தக வங்கிகள், கிராமப்புற வங்கிகள், கூட்டுறவு கடன் நிறுவனங்கள் (நகர கூட்டுறவு வங்கி உள்பட) மற்றும் உள்ளூர் வங்கிகள் (இதன் பிறகு “கடன் உதவி நிறுவனங்கள்” என்று குறிப்பிடப்படும்) வழங்கிய நேரடி விவசாய கடன்கள் ஆகியவை உள்ளடங்கும்.

2.2 உடனடியாக இந்த திட்டமானது அமலுக்கு வருகிறது.


3. வரையரை 3.1 “நேரடி விவசாய கடன்” என்றால் விவசாயிகளுக்கு, விவசாயத்திற்காக கொடுக்கப்பட்ட, குறுகிய கால பயிர் உற்பத்தி மற்றும் முதலீட்டு கடன். விவசாயி, குழுவில் (உதாரணம் சுயஉதவி குழு, கூட்டு கடமை குழு) இருக்கும் தனிப்பட்ட விவசாயிகளின் கடன் கணக்கை வங்கிகள் வைத்திருக்கும் நிலையில், அவர்களுக்க, அளிக்கப்பட்ட நேரடி கடன்களும் இதனில் அடங்கும்.



3.2 “குறுகிய கால பயிர் உற்பத்தி கடன்” என்றால் விவசாயிகளுக்கு, பயிர் வளர்ப்பதற்காக கொடுக்கப்படும் கடன் ஆகும். இதனை, 18 மாதங்களுக்குள் திரும்ப கட்ட வேண்டும். இந்த கடனானது ரூபாய் 1 லட்சத்திற்கு கீழ், பாரம்பரிய மற்றும் மாற்று விவசாயம் மற்றும் தோட்டக்கலை பயிர்கள் வளர்ப்பதற்காக வழங்கப்படுகிறது.

3.3. “முதலீட்டு கடன்” என்றால்


அ) விவசாயத்தில், வீணாகும் உடைமைகளை மாற்றுவதற்கும் மற்றும் பாரமரிப்பதற்கும், முதலீட்டு கடன் வழங்கப்படும். மேலும் நிலத்தின் வெளியீட்டை அதிகப்படுத்துவதற்கும் (உதாரணம் - கிணற்றை ஆழப்படுத்துவது, நீர் பம்ப் அமைப்பது, எருதுகள் (இரண்டு)\டிராக்டர் வாங்குவது, நில மேம்பாடு) முதலீட்டு கடன் வழங்கப்படும்.


ஆ) முதலீட்டு கடன், வேளாண் சார்ந்த மற்ற நடவடிக்கைகளான, பால் உற்பத்தி, கோழி வளர்ப்பு, ஆடு வளர்ப்பு, பன்றி வளர்ப்பு, மீன் வளர்ப்பு, தேனீ வளர்ப்பு, கிரீன் ஹவுஸ் மற்றும் சாண எரிவாயு அமைப்பது ஆகியவற்றில், உடைமைகளை வாங்குவதற்கும் கொடுக்கப்படும்.



3.4. “கூட்டுறவு கடன் நிறுவனங்கள்” ஆவது, (i) விவசாயிகளுக்கு குறுகிய கால பயிர் கடன் வழங்குவதும் மற்றும் மத்திய அரசு வழங்கும் வட்டிக்கான மானியத்திற்கு தகுதி வாய்ந்ததாகும்\ (ii) RBI அல்லது NABARAD மூலம் நிர்வகிக்கப்பட்டோ (அ) இந்த வங்கிகளின் மேற்பார்வையில், வங்கி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நிறுவனம்\ (iii) மாநிலத்திலோ அல்லது யூனியன் பிரேதசத்திலோ உள்ள குறுகிய கால கூட்டுறவு கடன் நிறுவனம் அல்லது நீண்டகால கூட்டுறவு கடன் நிறுவனத்தின் ஒரு பகுதியாகும்.

3.5. “குறு விவசாயி” என்றால், அதிகபட்சம் ஒரு ஹெக்டர் (2.5 ஏக்கர்) நிலத்தில் விவசாயம் செய்யும் விவசாயி ஆகும். (நில உரிமையாளராகவோ (அ) பயிரிடுவதில் பங்குதாரராகவோ)



3.6- “சிறு விவசாயி” என்றால், ஒரு ஹெக்டர் நிலத்திற்கு மேல், இரண்டு ஹெக்டர் நிலத்திற்குள் விவசாயம் செய்யும் விவசாயி ஆகும் (நில உரிமையாளராகவோ (அ) குத்தகைகாரராகவோ (அ) பயிரிடுவதில் பங்குதாரராகவோ)



3.7. “பிற விவசாயி” என்றால், இரண்டு ஹெக்டர் நிலத்திற்கு மேல் விவசாயம் செய்யும் விவசாயி ஆகும் (நில உரிமையாளராகவோ (அ) குத்தகைகாரராகவோ (அ) பயிரிடுவதில் பங்குதாரராகவோ)



4. தள்ளுபடி மற்றும் நிவாரணத்திற்கு தகுதியான கடன்தொகை 4.1. கடன் தள்ளுபடிக்கோ, கடன் நிவாரணத்திற்கோ, தகுதித்தொகையாக (இனிமேல் “தகுதித்தொகை” என குறிப்பிடப்படும்) கீழே வருபவை கருதப்படும்.



அ. குறுகிய கால உற்பத்தி கடனாக பெற்ற தொகையில் (வட்டி உட்பட);



(i) 31 மார்ச், 2007 வரை பட்டுவாடா செய்யப்பட்ட கடன் மற்றும் 31 டிசம்பர், 2007 வரையில் உள்ள நிலுவைத் தொகை மற்றும் 29 பிப்ரவரி, 2008 வரையிலான கட்டப்படாத தொகை.


(ii) 2004 மற்றும் 2006ல் வங்கிகளால் மத்திய அரசின் மூலம், திரும்ப செலுத்தும்காலம் மாற்றி அமைக்கப்பட்ட மற்றும் தவணை நீட்டிக்கப்பட்ட கடன்கள்.

(iii) இயற்கை சீற்றங்களினால், RBI விதிமுறைகளை கொண்டு, 31 மார்ச், 2007க்குள், செலுத்தும் காலம் மாற்றி அமைக்கப்பட்ட மற்றும் தவணை நீட்டிக்கப்பட்ட கடன்கள்.


ஆ. முதலீட்டு கடனில் தவணை தவறிய கடன் தொகை (தவறிய தவணைக்கு வட்டி உள்பட);


(i) 31 மார்ச், 2007 வரை பட்டுவாடா செய்யப்பட்ட கடன் மற்றும் 31 டிசம்பர், 2007 வரையில் உள்ள நிலுவைத் தொகை மற்றும் 29 பிப்ரவரி, 2008 வரையிலான கட்டப்படாத தொகை.


(ii) 2004 மற்றும் 2006ல் வங்கிகளால் மத்திய அரசின் மூலம், திரும்ப செலுத்தும்காலம் மாற்றி அமைக்கப்பட்ட மற்றும் தவணை நீட்டிக்கப்பட்ட கடன்கள்.


(iii) இயற்கை சீற்றங்களினால், RBI விதிமுறைகளை கொண்டு, 31 மார்ச், 2007க்குள், செலுத்தும் காலம் மாற்றி அமைக்கப்பட்ட மற்றும் தவணை நீட்டிக்கப்பட்ட கடன்கள்.


விளக்கம்


எந்த ஒரு முதலீட்டு கடனோ, 31 மார்ச், 2007க்குள் பட்டுவாடா செய்யப்பட்டு, அதன் தொடர்பாக ஏதேனும் வழக்கு தொடரப்பட்டு இருந்தால், அந்த கடனில், 31 டிசம்பர், 2007க்குள் திருப்பி கட்டப்படாத தவணை தொகைக்கு மட்டுமே, இத்திட்டத்தின் கீழ் நிவாரணம் அளிக்கப்படும்.


4.2. இத்திட்டத்தின் கீழ் வராத கடன்கள்


அ. தற்பொழுது நிலத்தில் இருக்கும் பயிரை தவிர்த்து, வேளாண் பொருட்களை அடமானம் வைத்து பெறப்படும் கடன்.


ஆ. கூட்டு நிறுவனம், பங்குதாரர் நிறுவனம், கூட்டுறவு கடன் நிறுவனங்களை தவிர்த்த சங்கங்களுக்கு (3.4 பத்தியில் கூறப்பட்டவை) கொடுக்கப்பட்ட வேளாண் நிதி உதவி



4.3. மார்ச் 31, 1997க்கு முன் பட்டுவாடா செய்யப்பட்ட எந்த ஒரு கடனும் இந்த திட்டத்தின் கீழ் வராது.



5. கடன் தள்ளுபடி 5.1. சிறு மற்றும் குறு விவசாயி என்னும் பட்சத்தில் தகுதித்தொகை முழுவதும் தள்ளுபடி செய்யப்படும்.


6. கடன் நிவாரணம் 6.1 பிற விவசாயி எனும் பட்சத்தில், விவசாயி கடன் தொகையில் 75 சதவீதத்தை ஒரே தடவையில் திருப்பி செலுத்தினால், அவருக்கு தகுதி தொகையில், 25 சதவீதம் நிவாரணம் அளிக்கப்படும்.

ஆனால், இணைப்பு 1ல் கூறப்பட்டுள்ள மாவட்டங்களில் இருக்கும், பிற விவசாயிகளுக்கு, தகுதி தொகையில், 25 சதவீதமோ அல்லது ரூபாய் 20,000, இதில் எது அதிகமோ அதற்கு நிவாரணம் அளிக்கப்படும், எப்பொழுது என்றால், விவசாயி மீதமுள்ள தொகையை திரும்ப செலுத்தும் பட்சத்தில்.


7. திட்ட நடைமுறை 7.1- மைய வங்கியின் அட்டவணையில் உள்ள வர்த்தக வங்கி, கிராமபுற வங்கி, கூட்டுறவு கடன் நிறுவனம், நகர கூட்டுறவு வங்கி மற்றும் இத்திட்டத்தின் கீழ் வழம் உள்ளூர் வங்கிகள் ஆகிய அனைத்து வங்கியின் ஒவ்வொரு கிளைகளும், இரு பட்டியலை தயாரிக்க வேண்டும். ஒன்று, இத்திட்டத்தின் கீழ், கடன் தள்ளுபடிக்கு தகுதியான, குறு மற்றும் சிறு விவசாயிகள், இரண்டு, இத்திட்டத்தின் கீழ் கடன் நிவாரணத்திற்கு தகுதியான பிற விவசாயிகள். ஒவ்வொரு விவசாயிகளின், நில உடைமை, அவர்களுக்கு வழங்கப்போகும் தகுதித்தொகை மற்றும் நிவாரணத் தொகையையும், இப்பட்டியலில் கொடுக்க வேண்டும். இந்த பட்டியல், ஒவ்வொரு வங்கி கிளையின், அறிவிப்பு பலகையில் ஜீன்-30 2008க்குள் தெரிவிக்கப்பட வேண்டும்.



7.2-தகுதித்தொகை, தள்ளுபடியாகும் பட்சத்தில், குறு மற்றும் சிறு விவசாயிகள், புதிய வேளாண் கடனிற்கு தகுதியானவர்கள் ஆவார்கள்.



7.3-கடன் நிவாரணத்திற்கு, தகுதியான பிற விவசாயிகள், தன்னுடைய பங்கை (நிவாரணத் தொகை கழிக்கப்பட்ட தகுதித்தொகை), மூன்றே தவணையில் செலுத்துவதாக ஒப்புக் கொள்ள வேண்டும். (முதல் இரண்டு தவணையில், குறைந்தது, பங்கின் மூன்றில் ஒரு பகுதியை செலுத்த வேண்டும்). மூன்று தவணை எனும் பட்சத்தில் 30 செப்டம்பர், 2008, 31 மார்ச், 2009 மற்றும் 30 ஜீன், 2009 ஆகிய தேதிகள் கடைசி தேதிகளாகும்.



7.4 RBI/NABARD ஆகிய வங்கிகளின் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பத்தில் உறுதிமொழி எடுத்துக் கொள்ளலாம்.



7.5-பிற விவசாயின், நிவாரணத் தொகையானது (மத்திய அரசின் பங்கு), அந்த ஒரு விவசாயி தன்னுடைய பங்கை முழுமையாக செலுத்திய உடன், அவரது கணக்கில் சேர்க்கப்படும்.



7.6- பிற விவசாயி, தன்னுடைய பங்கில், மூன்றில் ஒரு பகுதியை செலுத்திய உடன், புதிய குறுகிய கால பயிர் உற்பத்தி கடனுக்கு தகுதியானவர் ஆவார்.



7.7-முதலீட்டு கடனில் பிற விவசாயி தன்னுடைய முழு பங்கையும் செலுத்திய பின்னரே, புதிய முதலீட்டு கடனுக்கு தகுதியானவர் ஆவார்.



7.8- மைய வங்கியின் அட்டவணையில் உள்ள, நகர கூட்டுறவு வங்கி மற்றும் உள்ளூர் வங்கி ஆகிய வங்கிகளுக்கு, இந்த திட்டத்தை நடைமுறை படுத்துவதற்கு, RBI மைய பிரதிநிதி ஆகும். கிராமப்புற வங்கி மற்றும் கூட்டுறவு கடன் நிறுவனங்க்கு NABARD, மைய பிரதிநிதி ஆகும்.



8. வட்டி மற்றும் இதர கட்டணங்கள் 8,1- நிதி உதவி அளித்த நிறுவனங்கள் எதுவும், 29 பிப்ரவரி, 2008க்கு மேல் உள்ள காலத்திற்கு, தகுதி தொகைக்கு, வட்டியை கணக்கிடாது. ஆனால் பிற விவசாயி வகையில், எந்த ஒரு விவசாயி தகுதித் தொகையில், தன்னுடைய பங்கை செலுத்தாமல், கடன் நிவாணத்திற்கு தகுதியற்றவராகும் தருணத்தில் வங்கியானது 30 ஜீன், 2009-க்கு மேல் கடன் தொகைக்கு வட்டியை கணக்கிடலாம்.



8.2- முதலீட்டு கடனில், 31.12.2007-க்கு மேல் உள்ள கட்ட வேண்டிய தொகைக்கு நிதி நிறுவனங்கள், கடனுக்கு பொருத்தமான வட்டியுடன், தொகையை கைப்பற்றலாம். இருந்தாலும், நிதி நிறுவனங்கள் சில நியாயமான காரணங்களால் கட்ட தவறிய கடனில் வங்கி கொள்கைகளுக்கு இணங்க, தவணை காலத்தை நீட்டிப்பு செய்யலாம்.



8.3- இத்திட்டத்தின் கீழ் வரும் கடனாக இருந்த போதிலும், கடன் உதவி நிறுவனங்கள் மத்திய அரசிடம் இருந்து பெறும் வட்டியான ஈட்டுதொகை, கடனின் மூல தொகையைவிட அதிகம் ஆகக்கூடாது.


8.4 கடனுதவி நிறுவனங்களுக்கான, அன்றாட மற்றும் வேறு விவசாயங்களுக்கான (விவசாயி மற்றும் மத்திய அரசிடமிருந்து கோரும் வட்டி மற்றும் இதர கட்டணங்கள் உட்பட) வழிமுறைகளை நிதியமைச்சகம், பின் இணைப்பாக கொடுக்கும்.



9.கடன் தள்ளுபடி மற்றும் நிவாரணத்திற்கான சான்றிதழ் 9.1. குறு மற்றும் சிறு விவசாயகிளுக்கு, தகுதி தொகை தள்ளுபடி ஆன உடன், கடன் உதவி நிறுவனம், கடன் தள்ளுபடி ஆனதையும் மற்றும் தகுதி தொகையின் தொகையும், குறிப்பிட்டு சான்றிதழ் வழங்கும்


9.2. பிற விவசாயிகளுக்கு, கடன் நிவராணம் வழங்கப்பட்ட உடன், கடன் உதவி நிறுவனங்கள், தங்களது விருப்பத்திற்கேற்ப கடன் தொகை திரும்ப செலுத்தியதையும், மற்றும் எவ்வளவு தகுதி தொகை என்பதையும், எவ்வளவு பங்கு, விவசாயியால் திரும்ப கட்டப்பட்டது என்றும் எவ்வளவு தொகைக்கு நிவாரணம் அளிக்கப்பட்டது என்றும் குறிப்பிட்டு சான்றிதழ் அளிக்கப்படும்.


9.3 RBI/NABARAD பரிந்துகளின் படி சான்றிதழ்கள் வழங்கப்படும் கடனுதவி நிறுவனங்கள் சான்றிதழ்களை வழங்கிய உடன் விவசாயிடமிருந்து சான்றிதழ்களை பெற்றுக் கொண்டதற்கான ஒப்புதல் படிவம் பெறப்படும்.
10. தமிழ்நாட்டில் DPAP, DDP மற்றும் பிரதமரின் சிறப்பு நிவாரணத்திற்கு கீழ் வரும் மாவட்டங்கள் கோயம்புத்துர்

தருமபுரி

திண்டுக்கல்

கரூர்

கிருஷ்ணகிரி

நாமக்கல்

பெரம்பலூர்

புதுக்கோட்டை

இராமநாதபுரம்

சேலம்

சிவகங்கை

திருச்சிராப்பள்ளி

திருநெல்வேலி

திருவண்ணாமலை

தூத்துக்குடி

வேலுர்

விருதுநகர்











தகவல் : நபார்டு வங்கி



கருத்துகள் இல்லை: