19 டிச., 2007

எரிகட்டி தயாரித்தல்

உயிர்மப்பொருள்களிலிருந்து எரிகட்டி தயாரித்தல்
நம் கிராமப்புறங்களில், ஒவ்வொரு பயிர் அறுவடைக்குப் பின்பும் அதிக அளவிலான வேளாண் கழிவுகள் எஞ்சி விடுகின்றன. பெரும்பாலான சமயங்களில், அறுவடைக்குப்பின் உள்ள வேளாண் கழிவுகள் வயலிலேயே எரிக்கப்படுகின்றன. கட்டைக்கரி தயாரிக்கும் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி எஞ்சிய வேளாண் கழிவுகளில் இருந்து எரிபொருள் உற்பத்தி செய்யலாம். இவ்வாறு செய்வதன் மூலம், மிக சிக்கனமான முறையில், சுற்றுச் சூழலுக்கு மாசுஏற்படாத வகையில் எரிபொருள் உற்பத்தி செய்யமுடியும். மேலும் இதன் மூலம் குடும்பத்திற்கு கூடுதல் வருமானம் கிடைக்கிறது.
எரிகட்டி ஆக்குதல் என்றால் என்ன?
குறைந்த இறுக்கம் உடைய உயிர்மப் பொருள்களைக் கொண்டு நன்கு இறுகிய, ஆற்றல் கொண்ட அடர்ந்த எரிபொருள்களை உருவாக்குவதே எரிகட்டி ஆக்குதல் ஆகும்.
செயல் முறை

எரிகட்டி தயார்செய்வதில் இரு முறைகள் உள்ளன.

1. நேரடி முறை
உயிர்மப் பொருள்களை நேரடியாக முழுமைபெறாத வெப்பமேற்றி, கட்டைகரி தயாரித்தல் நேரடி முறையாகும்.
2. மறைமுக முறை
இம்முறையில், உயிர்மப் பொருள்களை நேரடியாக வெப்பமூட்டாமல், அவற்றை காற்றில்லா கலனில் வைத்து ஒரு வெளிபுற வெப்ப மூலம் பயன்படுத்தி கரி கட்டை தயார் செய்யப்படும், இதன் மூலம் நல்ல தரமான, மாசில்லாத, குறைந்த புகையுடைய கரிகட்டை தயார்செய்யப்படும்.

MCRC யின் கரிகட்டை தயார்செய்யும் முறை

தேவைப்படும் பொருள்கள்
1. உள்ளுரில் கிடைக்கக் கூடிய உயிர்மப் பொருள்கள் (சவுக்கு கூழ்படிவுகள், கரும்பு சோகை, தவிடு, தேங்காய் மஞ்சி, கடலை பொட்டு போன்றவை).
2. கரியாக்கும் கலன்
3. பசை (மரவள்ளி கிழங்கு மாவு)
4. சிறு எரிகட்டி தயாரிக்கும் இயந்திரம் (மணிக்கு 10 கிலோ அளவில்)

எரிகட்டி தயாரிக்குக் செயல்முறை (படிப்படியாக

1. உயிர்மப் பொருள்களை தயார்செய்தல்
உள்ளுரில் கிடைக்ககூடிய உயிர்மப் பொருள்களை சேகரித்து, தரம்பிரித்து, சிறிய துண்டுகளாக வெட்டி வெயிலில் உலர்த்த வேண்டும்.
2. கரியாக்கம்
கலன் வடிவமைத்தல்
• வெளிப்புற தொட்டி
200 லிட்டர் அளவுடைய, மேல்பகுதி வெட்டப்பட்ட, கீழ்பகுதியில் 12” அகலம் ஜ் 10” உயரம் ஓட்டை உடைய உலோகத் தொட்டி. இரண்டு இரும்பு கம்பிகளை (8”) உலோகத் தொட்டியில் மேல் கீழாக பொருத்த வேண்டும். இது உள்ளே பொருத்தப்பட உள்ள ஸ்டீல் தொட்டியை தாங்குவதற்கு பயன்படுகிறது.
• உட்புற தொட்டி
100 லிட்டர் அளவுடைய ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் தொட்டி தேவைப்படுகிறது. இதற்கு நல்ல மூடியும், கீழ்பகுதியில் 3/8” என்ற அளவில் ஆறு ஓட்டைகளும் இருக்க வேண்டும்.
உயிர்மப் பொருள்களை கரியாக்கம் செய்தல்:
•உயிர்மப் பொருள்களின் அளவைப் பொருத்து அவற்றை உள்தொட்டியில் போட்டு 45 நிமிடம் முதல் 1 மணி நேரம் வரை எரிக்க வேண்டும்.
•பின்பு கரியாக்கம் செய்யப்பட்ட உயிர்மப் பொருள்களை உள்தொட்டியில் இருந்து சேகரித்து எடை போட வேண்டும். இம்முறையில் 30% கரிகட்டியை பெற முடியும்.
3. பசை தயாரிக்கும் முறை
கரிகட்டியை உறுதிப்படுத்த பசையை பயன்படுத்த வேண்டும்.
கரியாக்கம் செய்யப்பட்ட 100 கிலோ கரிகட்டிகளுக்கு, 5-6 கிலோ மரவள்ளி மாவை 60-100 லிட்டர் தண்ணீரில் கரைத்து தயார் செய்த பசைக்கலவையை பயன்படுத்த வேண்டும். (அங்ககப் பொருள்களின் அளவைப் பொருத்து).
4. கலக்குதல்
கரியாக்கம் செய்யப்பட்ட கரிப்பொடியை பசையுடன் நன்கு கலக்க வேண்டும். இதனால் நல்ல தரமுள்ள எரிகட்டியை தயார் செய்ய முடியும்.
5. எரிகட்டி தயார் செய்தல்
கரி கலவையிலிருந்து, இயந்திரம் கொண்டோ அல்லது கையாலே எரிகட்டி தயார் செய்யலாம். கரிகலவையை நேரடியாக எரிகட்டி தயார் செய்யும் இயந்திரத்தில் ஊற்ற வேண்டும்.
6. உலர்த்துதல் மற்றும் பாலித்தீன் பைகளில் அடைத்தல்
எரிகட்டிகளை சேகரித்து, வெயிலில் உலர்த்தி, பாலித்தின் பைகளில் போட்டு மூட வேண்டும்


எரிகட்டியின் பொதுவான பண்புகள்
ஈரப்பதம் : 7.1 - 7.8%
ஆவியாகக்கூடிய பொருள்கள் : 13.0 - 13.5%
நிலையான கரிமம் : 81.0 - 83.0%
சாம்பல் : 3.7 - 7.7%
சல்பர் : 0.0%
வெப்ப மதிப்பு : 7100-7300 கிலோ கேலரீஸ் \ கிலோ
அடர்த்தி : 970 கிலோ / செமீ3


இத்தொழில்நுட்பத்தின் நன்மைகள்
புகையின்மை : எரிகட்டிகளை பற்ற வைக்கும் போதும் எரிக்கும் போதும் புகை வராது.
2. அதிக நிலையான கரிமம் மற்றும் சூடு உண்டுபண்ணுகிற மதிப்பு : எரிகட்டியின் கரிம மதிப்பு 82%. அதன் வெப்பமூட்டும் மதிப்பு 7500 கிலோ கேலோரீஸ் / கிலோ.
3. குறைவான சாம்பல் அளவு : குறைவான சாம்பல் படிகிறது (கரி எடையில் 5% குறைவான அளவு).
4. நாற்றமின்மை : எரிகட்டியில் குறைவான அளவு ஆவியாகும் பொருள்கள் இருப்பதால் நாற்றம் ஏற்படுவதில்லை.
5. அதிகமான எரியும் நேரம் : சாதாரண கட்டைகள் எரியும் நேரத்தை விட இரண்டு மணி நேரம் அதிகமாக எரியும் தன்மை எரிகட்டிக்கு உண்டு.
6. பொறியின்மை : எரிகட்டியை எரிக்கும்போது தீப்பொறி வருவதில்லை.
7. குறைவான வெடிப்பு, நீடித்த உறுதி : வெடிப்புகள் குறைந்து உறுதியாக இருப்பதால் கரிகட்டிகள் நீண்ட நேரம் எரிகின்றன

நன்றி ; இந்திய முன்னேற்ற நுழைவாயில்

கருத்துகள் இல்லை: