தேசிய வேளாண் காப்பீட்டுத் திட்டங்களை அமலப்டுத்துவதற்கென மத்திய அரசு ‘இந்திய வேளாண் காப்பீட்டு நிறுவனம்’ என்ற தனி அமைப்பை நிறுவியுள்ளது. இந்நிறுவனம், வேளாண்மை மற்றும் அதனைச் சார்ந்த துறைகளுக்கான ஏனைய காப்பீட்டுத் திட்டங்களை அமைத்து அவற்றை அமல்படுத்தவுள்ளது.
திட்ட ஆதரவாளர்கள்
ஜெனரல் இன்ஸ்யூரன்ஸ் கார்ப்பேரசன் ஆப் இந்தியா - 35% பங்குதாரர்.
தேசிய வேளாண்மை மற்றும் கிராம மேம்பாட்டு வங்கி - 30% பங்குதாரர்.
நேசனல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் - 8.75% பங்குதாரர்.
நியூ இந்தியாஅஷ்யூரன்ஸ் கம்பெனி - 8.75% பங்குதாரர்.
ஓரியண்டல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட்- 8.75% பங்குதாரர்.
யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் - 8.75% பங்குதாரர்.
வளைதளம்: www.aicofindia.org
தேசிய வேளாண் காப்பீட்டு திட்டத்தில் நடப்பு 2007-2008 ஆம் ஆண்டில் சேருவதற்கு அனைத்து மாவட்டங்களிளும் நெல் பயிரிட்டுள்ள உழவர்கள் நாளைக்குள் ( 16/12/07 ) விண்ணப்பிக்களாம் . இதில் சேருவதற்கு மானியம் வழங்கப்படுகிறது.தவணைத் தொகை ஏக்கருக்கு ; ரூ:136 எனினும் குறு உழவர்கள் ரூ:63 ம் பிற உழவர்கள் ரூ:68 ம் செழுத்தினால் போதும்.
எனவே இத் திட்டத்தில் சேர விரும்பும் உழவர்கள், தங்கள் சேமிப்பு வங்கி கணக்கு வைத்துள்ள வங்கிகளில் தவணைத் தொகை செழுத்தி விண்ணப்பிக்கலாம்
இத்திட்டத்தின் முக்கிய அம்சங்கள்
1. திட்டத்தின்கீழ் வரும் பயிர்கள்
கீழே குறிப்பிடப்பட்டுள்ள பயிர் வகைகளில் ஏதாவது ஒன்றாக இருத்தல் வேண்டும். முந்திய வருடங்களில் ஆய்வு செய்யப்பட்ட மகசூல் விபரம் இருத்தல் வேண்டும்
உணவு பயிர்கள் (தானியங்கள், சிறுதானியங்கள், பயிர் வகைகள்)
எண்ணெய் பயிர்கள்
கரும்பு, பருத்தி, உருளைக்கிழங்கு (ஓராண்டு வணிக பயிர்கள் )
முந்தைய மூன்று வருட மகசூல் விபரம் உள்ள ஓராண்டு வணிக பயிர்கள் / ஓராண்டு தோட்டக்கலை பயிர்கள். அடுத்த ஆண்டு திட்டத்தின் கீழ் வரேவண்டிய பயிர்களை முந்தய ஆண்டு முடிவிலேயே குறிப்பிட வேண்டும்.
2.திட்டத்தில் வரும் மாநிலங்கள் இத்திட்டத்தை அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரேதசங்களுக்கும் நீட்டிப்பு செய்யலாம். மாநில அரசும், யூனியன் பிரேதசங்களும் இத்திட்டத்தில் சேரவேண்டுமெனில், தேர்வு செய்யப்பட்ட பயிர்களை அவ்வருடத்தில் பயிர்செய்ய வேண்டும்.
இத்திட்டத்தை தேர்வு செய்தபின் குறைந்த அளவாக மூன்று வருடத்திற்கேனும் தொடர
வேண்டும்.
3.காப்புறுதி திட்டத்தின் கீழ் வரும் விவசாயிகள்
குறிப்பிட்ட பயிர்களை குறிப்பிடப்பட்டுள்ள பகுதிகளில் பயிர் செய்யும் கூட்டு சாகுபடியாளர்கள், குத்தகைதாரர்கள் போன்ற அனைத்து விவசாயிகளும் இத்திட்டத்தின் கீழ் வருவர்.
பருவ கால வேலைகளுக்காக நிதி நிறுவனங்களிடம் இருந்து கடன் பெற்று குறிப்பிட்ட பயிர்களை சாகுபடி செய்யும் விவசாயிகள்
இத்திட்டத்தில் தன்னார்வத்துடன் சேர்ந்து, குறிப்பிடப்பட்டுள்ள பயிர்களை சாகுபடி செய்யும் விவசாயிகள்
4.அபாயங்களுக்கான காப்புறுதி
தடுக்கமுடியாத அபாயங்களால் ஏற்படும் மகசூல் இழப்பிற்கான காப்புறுதி (கீழ்கண்டவாறு)
தீ மற்றும் இடி தாக்கம்
புயல், ஆலங்கட்டி மழை, சுழல் புயல் காற்று, புயல் மழை
வெள்ளம், அளவுக்கு மீறிய நீர்வரத்து, நிலச்சரிவு
வறட்சி, மழையில்லா காலம்
நோய் / பூச்சி தாக்கம்
போர் மற்றும் அணுசக்தி அபாயங்களாலும் மற்ற பிற தடுக்கக் கூடிய அபாயங்களாலும் ஏற்படக்கூடிய நஷ்டங்களும் இதனுள் அடங்கும்.
5. காப்பீட்டுத் தொகை / வரம்பு
காப்பீடு செய்யப்பட்ட பயிரின் அதிகபட்ச மகசூல் மதிப்பின் அளவு வரையில் காப்பீட்டு தொகையை நீட்டிக்கலாம். மேலும் பயிரின் சராசரி மகசூலின் 150% காப்பீட்டு தொகையை, தவணைக் கட்டணமாக செலுத்தலாம்.
கடன் பெற்றுள்ள விவசாயிகள், குறைந்தேதனும் கடன் தொகைக்கு சமமாக காப்பீடு செய்ய வேண்டும்.
மேலும் கடனுதவி பெற்றுள்ள விவசாயிகளுக்கு காப்பீட்டு செலவுகள் அதிகம்.
பயிர்வாரி கடன் பெற்றவர்கள் ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா மற்றும் நபார்ட் வங்கியின் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
6.தவணைக் கட்டணத் தொகை எண்
பருவம்
பயிர்கள்
தவணைக் கட்டணம்
1.
காரிப் கம்பு மற்றும் எண்ணெய் பயிர்கள்
காப்பீட்டுத் ெதாகையின் 3.5% அல்லது குறிப்பிட்டுள்ள காப்பீட்டு கணக்கரின் கட்டண வீதம் (எது குறைவோ)
மற்ற பயிர்கள் (தானியங்கள், சிறு தானியங்கள், பயிர் வகைகள்)
காப்பீட்டுத் ெதாகையின் 2.5% அல்லது குறிப்பிட்டுள்ள காப்பீட்டு கணக்கரின் கட்டண வீதம் (எது குறைவோ)
2.
(ரபி) பின் பருவப் பயிர்
கோதுமை
காப்பீட்டுத் ெதாகையின் 1.5% அல்லது குறிப்பிட்டுள்ள காப்பீட்டு கணக்கரின் கட்டண வீதம் (எது குறைவோ)
மற்ற பயிர்கள் (தானியங்கள், சிறு தானியங்கள், பயிர் வகைகள்)
காப்பீட்டுத் ெதாகையின் 2.0% அல்லது குறிப்பிட்டுள்ள காப்பீட்டு கணக்கரின் கட்டண வீதம் (எது குறைவோ)
3.
காரீப் மற்றும் ரபி
ஓராண்டு வணிகப்பயிர்கள் / ஓராண்டு ேதாட்டக்கலை பயிர்கள்
குறிப்பிட்டுள்ள காப்பீட்டு கணக்கரின் கட்டண
· தானியங்கள், சிறுதானியங்கள், பயிர்வகைகள், எண்ணெய் பயிர்கள் ஆகியவற்றிற்கான விதிமுறைகளை ஐந்து வருடத்திற்கொரு முறை பரிசீலனை ெசய்யப்படும். மாநில அரசும், யூனியன் பிரேதசங்களும், காப்பீட்டுத்தொகையை மாவட்டம் / மண்டலம் / மாநில அளவில் நிர்ணயம் ெசய்கின்றன.
7. தவணை கட்டணச் சலுகை சிறு மற்றும் குறுநில விவசாயிகளுக்கு 50% தவணை கட்டணச் சலுகை வழங்கப்படுகிறது. இதனை மத்திய அரசும், மாநில அரசும் பகிர்ந்து கொள்கின்றன. திட்டத்தின் முதலாம் ஆண்டு பொருளாதார அமைப்பை பொருத்தும், விவசாயிகளின் பங்கேற்பை பொருத்தும் தவணைக் கட்டணச் சலுகை நிர்ணயம் செய்யப்படுகிறது.
சிறுநில விவசாயி
மாநில அரசின் உச்ச நில வரம்பு சட்டத்தின் படி 2 எக்டர் மற்றும் அதற்கு கீழ் வைத்திருப்போர்.
குறுநில விவசாயி
1 எக்டர் (2.5 ஏக்கர்) அல்லது அதற்கு கீழ் நிலம் வைத்திருப்போர்.
8.காப்புறுதி வழங்கப்படும் முறை
உச்சவரம்பு மகசூலை விட அவ்வருடத்தின் நடப்பு மகசூல் குறைவாக இருந்தால், அப்பகுதியில் காப்பீடு செய்த விவசாயிகள் அனைவரும், பாதிக்கப்பட்டோராக கருதப்பட்டு, அவர்களுக்கு ஈடான தொகை வழங்கப்படும்.
(மகசூல் பற்றாக்குறை / உச்சவரம்பு மகசூல்) ஜ் விவசாயியின் காப்பீடு தொகை மகசூல் பற்றாக்குறை = உச்சவரம்பு மகசூல் கிடக்கப்பெற்ற மகசூல் என்ற விதிப்படி ஈடாக கொடுக்கப்படும் தொகை கணக்கிடப்படும்.
9.சேதாரத்திற்கான ஈடு வழங்கப்படும் முறை குறிப்பிடப்பட்டுள்ள தேதிக்குள் கிடைக்கப்பெற்ற மகசூல் விபரங்களை கொண்டு, ஈடாகக் கொடுக்க வேண்டிய தொகை நிர்ணயம் செய்யப்பட்டு, விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.
சேதார ஈடுதொகைக்கான காசோலையும், விபரங்களும் அப்பகுதி வங்கிகளுக்கு அனுப்பப்படும் வங்கிகள் அவற்றை விவசாயிகள் வங்கி கணக்குகளில் வரவு வைத்துக் கொண்டு, பயனானிகளின் பெயர்களை செய்தி பலகையில் வெளியிடுகின்றன.
புயல், மழை, நிலச்சரிவு, புயல்காற்று, வெள்ளம் போன்றவற்றிற்கான ஈடு தொகை, (மாநிலம் / யூனியன் பிரதேசங்களின் கணக்கீடு) தனி விவசாயகளின் இழப்பை ஆராய்ந்த பின்னர் வழங்கப்படும்.
10.மறு காப்பீட்டுத் திட்டம் இன்சூரன்ஸ் அத்தாரிட்டி-யின் முயற்சி கொண்டு, சர்வேதச மறுகாப்பீட்டு சந்தையில், ஸிரிஙிசீ க்கான மறு காப்பீட்டு முறை வழங்கப்படும்.
தேவைப்படும் படிவங்கள்
கடனுதவி பெற்றுள்ள விவசாயிகளுக்கான அறிக்கை படிவம்
கடனுதவி பெறாதோருக்கான அறிக்கை படிவம்
கடன் பெறாதோருக்கான முன்மொழிவு படிவம்
NAISஇன் கீழ்வரும் அனைத்து பயிர் காப்பீட்டு விபரங்கள் பற்றிய பதிவேடுகள் / அறிக்கைகள்.
மேலும் தகவல் அறிய: காப்பீட்டுத் திட்டங்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக