20 செப்., 2011

விவசாயி கடன் அட்டைத் திட்டம்


விவசாயி கடன் அட்டைத் திட்டம்




பயிர் உற்பத்தி மற்றும் இடுபொருள் வாங்குதல் போன்ற சிறு அளவிலான பண தேவைகளை அதிக சிரமமின்றி உடனுக்குடன் வங்கி அமைப்புகளிலிருந்து பெற்றுத்தருவதே கிஸான் கடன் அட்டைத் திட்டத்தின் குறிக்கோளாகும்.
கிஸான் கடன் அட்டைத் திட்டத்தின் பலன் என்ன?
  • பணப் பட்டுவாடாநடைமுறைகளை எளிமைப்படுத்துகிறது
  • பணம் மற்றும்பொருள் வாங்குதல் தொடர்பான பிரச்சனைகளை நீக்குகிறது
  • ஓவ்வொரு பயிருக்கும்தனித்தனியாகக் கடனுக்கு விண்ணப்பிக்கத் தேவையில்லை
  • எந்த நேரத்திலும்உறுதியாகக் கிடைக்கக்கூடியதால் விவசாயிகளுக்கு வட்டிச்சுமையை வெகுவாக குறைக்கக்கூடியது
  • விதைகளையும்உரங்களையும் விவசாயிகள் தங்கள் வசதி மற்றும் தேர்வுக் கேற்றவகையில் வாங்கிக்கொள்ளலாம்
  • வாங்கும்போதேமுகவர்களிடமிருந்து தள்ளுபடி பெற்றுக்கொள்ளலாம்
  • மூன்றுவருடங்களுக்கான கடன் வசதி உண்டு. பருவகால மதிப்பீடுகள் தேவையில்லை
  • விவசாய வருமானம்அடிப்படையில் அதிகபட்ச கடன் வரம்பு உண்டு
  • கடன் வரம்பைபொறுத்து எந்தத் தொகையையும் பெற்றுக்கொள்ளலாம்
  • பணம் திரும்பச்செலுத்துதல் அறுவடைக்குப் பிறகு மட்டுமே
  • விவசாய கடனுக்குவழங்கப்படும் அதே வட்டி விகிதம்
  • விவசாய கடனுக்குவழங்கப்படும் அதே கடன் உத்திரவாதம், பாதுகாப்பு, குறிப்பிட்ட வரம்பு மற்றும் ஆவணநிபந்தனைகள்


கிஸான் கடன் அட்டையைப் பெறுவது எப்படி?
  • உங்கள் அருகாமையிலுள்ள பொதுத்துறை வங்கிகளை அணுகி தகவல்களைப் பெறுங்கள்
  • தகுதியுடைய விவசாயிகள் கிஸான் கடன் அட்டையையும், வங்கி பாஸ் புத்தகத்தையும் பெறுவார்கள். இது உடையவரின் பெயர், முகவரி, வைத்திருக்கும் நிலம் பற்றிய விபரம், பணம்பெறும் வரம்பு, செல்லுபடியாகும் காலம், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஒன்று ஆகியவற்றைக் கொண்டிருக்கும். மேலும் இது, அடையாள அட்டையாகவும் தொடர் செயல்பாடு அடிப்படையிலான நடவடிக்கைகளின் பதிவை வசதிசெய்யும் வகையிலும் பயன்படும்.
  • பணம் பெறுவர் அட்டையும் பாஸ் புத்தகத்தையும், அந்தக் கணக்கை செயல்படுத்திக்கொள்ளும்போது சமர்ப்பிக்க கோரப்படுகிறார்.

முன்னணி வங்கிகளின் கிஸான் கடன் அட்டைகள்
  • அலகாபாத் வங்கி        - கிஸான் கடன் அட்டை
  • ஆந்திரா வங்கி           - ஏ பி கிஸான் பச்சை அட்டை
  • பரோடா வங்கி           - பி கே சி சி
  • இந்திய வங்கி            - கிஸான் சமாதன் அட்டை
  • கனரா வங்கி             - கிஸான் கடன் அட்டை 
  • கார்ப்பரேஷன் வங்கி      - கிஸான் கடன் அட்டை
  • தேனா வங்கி             - கிஸான் தங்க கடன் அட்டை
  • ஓரியண்ட் காமர்ஸ் வங்கி  - ஓரியண்டல் பச்சை அட்டை
  • பஞ்சாப் தேசிய வங்கி      - பிஎன்பி கிருஷி அட்டை
  • ஹைதராபாத் ஸ்டேட் வங்கி- கிஸான் கடன் அட்டை
  • இந்திய ஸ்டேட் வங்கி     - கிஸான் கடன் அட்டை
  • சிண்டிகேட் வங்கி        - எஸ் கே சி சி
  • விஜயா வங்கி             - விஜய கிஸான் அட்டை


விவசாய கடன் அட்டைதாரர்களுக்கான தனிநபர் விபத்து காப்பீட்டுத் திட்டம்
விவசாயக்  கடன் அட்டைதாரர்களுக்கென தனி நபர் விபத்து காப்பீடு வழங்கப்படுகிறது
திட்டத்தின் சிறப்பம்சங்கள்:
  • நோக்கம்: விபத்துக்களால் உண்டாகும்  (உள்நாட்டிற்க்குள்) இறப்பு (அல்லது) நிரந்தர ஊனங்களுக்கான இழப்பீடுகளை அனைத்து விவசாய கடன் அட்டைதாரர்களுக்கும் வழங்குவது
  • பயனாளிகள்: 70 வயது வரையிலான அனைத்து விவசாய கடன் அட்டைதாரர்களும்
  • இத்திட்டத்தின் மூலம் கீழ்கண்ட அளவு இழப்பீட்டு பயன்கள் பெறலாம்
  • விபத்து மற்றும் வன்முறை காரணமான மரணம் எனில் ரூ.50,000/-.
  • நிரந்தரமான ஒட்டுமொத்த ஊனம் எனில்  ரூ.50,000/- .
  • இரண்டு கைகள் அல்லது கால்கள் இழப்பு, இரண்டு கண்கள் இழப்பு, அல்லது ஒரு கண் மற்றும் ஒரு கை அல்லது கால் இழப்பு எனில். ரூ.50,000/-
  • ஏதேனும் ஒரு கை அல்லது கால், அல்லது ஒரு கண் இழப்பு எனில் ரூ.25,000/-.
மாஸ்டர் பாலிஸியின் காலம் : 3 ஆண்டு காலத்திற்கு செல்லக் கூடியது.
காப்பீட்டுக் காலம்: ஆண்டு சந்தா செலுத்தும் வங்கிகளில் இருந்து பிரீமியம் பெற்ற நாளில் இருந்து ஓராண்டு வரை காப்பீடு நடப்பில் இருக்கும். மூன்றாண்டுத் திட்டமெனில், பிரீமியம் பெறப்பட்ட நாள் முதல் மூன்றாண்டிற்கு காப்பீடு செல்லும்
பிரீமியம்:  விவசாய கடன் அட்டைதாரரின் ஆண்டு சந்தா ரூ. 15/- ல், ரூ. 10/- த்தை  நேரடியாகவும், ரூ. 5/- கடன் அட்டைதாரரிடமிருந்து வசூலித்தும், வங்கி செலுத்த வேண்டும்
செயல்படும் வழிமுறைஇந்தச் சேவையை செயல்படுத்த நான்கு காப்பீட்டுக் கழகங்கள் சரக வாரியான அடிப்படையில் பொறுப்பேற்று உள்ளன. ஆந்திரா, கர்நாடகா, கேரளா, அந்தமான் நிக்கோபார், பாண்டிச்சேரி, தமிழ்நாடு, லட்சத்தீவுகள் ஆகிய பகுதிகளுக்கான சேவையை யுனைடெட் இந்தியா இன்ஸ்யூரன்ஸ் கம்பெனி (லி) நிறுவனம் வழங்குகிறது .
விவசாய கடன் அட்டைவழங்கும் வங்கிக்கிளைகள், அட்டைகள் வழங்கப்படுவதேற்ப, மாதா மாதம் விவசாயிகளின் பெயர் பட்டியலுடன், பிரீமியத் தொகையை இணைத்து அனுப்ப வேண்டும்.
இழப்பீட்டு தொகை பெறும் முறைஇறப்பு, குறைபாடுகள், நீரில் மூழ்கி மரணம் ஆகியவற்றுக்கு, இன்சூரன்ஸ் கம்பெனிகளால் அதற்காக உள்ள அலுவலகங்களில் நிர்வாக முறைகள் செயல்படுத்தப்படும்.

பயனுள்ள வங்கித்தொடர்புகள்
நன்றி :

1 கருத்து:

Alok Verma சொன்னது…

இணைப்பை கீழே கொடுக்கப்பட்ட மீது நீங்கள் கிளை விவரங்கள், ஸ்விஃப்ட் குறியீடு, MICR குறியீடு, வங்கி வரியில்லா இலவச இல்லை, வாடிக்கையாளர் பாதுகாப்பு இல்லை, போன்றவை இணைந்து அனைத்து இந்திய மற்றும் தனியார் வங்கி கிளைகள் மேம்படுத்தப்பட்டது Code என்ன குறியீடு பட்டியலை காணலாம்.

http://www.codebankifsc.com/