13 நவ., 2007
விவசாய கடன் அட்டைத் திட்டம்
பயிர் உற்பத்தி மற்றும் இடுபொருள் வாங்குதல் போன்ற சிறு அளவிலான பண தேவைகளை அதிக சிரமமின்றி உடனுக்குடன் வங்கி அமைப்புகளிலிருந்து பெற்றுத்தருவதே கிஸான் கடன் அட்டைத் திட்டத்தின் குறிக்கோளாகும்.
கிஸான் கடன் அட்டைத் திட்டத்தின் பலன் என்ன?
• பணப் பட்டுவாடா நடைமுறைகளை எளிமைப்படுத்துகிறது
• பணம் மற்றும் பொருள் வாங்குதல் தொட்ாபான பிரச்சனைகளை நீக்குகிறது
• ஓவ்வொரு பயிருக்கும் தனித்தனியாகக் கடனுக்கு விண்ணப்பிக்கத் தேவையில்லை
• எந்த நேரத்திலும் உறுதியாகக் கிடைக்கக்கூடியதால் விவசாயிகளுக்கு வட்டிச்சுமையை வெகுவாக குறைக்கக்கூடியது
• விதைகளையும் உரங்களையும் விவசாயிகள் தங்கள் வசதி மற்றும் தேர்வுக் கேற்றவகையில் வாங்கிக்கொள்ளலாம்
• வாங்கும்போதே முகவர்களிடமிருந்து தள்ளுபடி பெற்றுக்கொள்ளலாம்
• மூன்று வருடங்களுக்கான கடன் வசதி உண்டு. பருவகால மதிப்பீடுகள் தேவையில்லை
• விவசாய வருமானம் அடிப்படையில் அதிகபட்ச கடன் வரம்பு உண்டு
• கடன் வரம்பை பொறுத்து எந்தத் தொகையையும் பெற்றுக்கொள்ளலாம்
• பணம் திரும்பச் செலுத்துதல் அறுவடைக்குப் பிறகு மட்டுமே
• விவசாய கடனுக்கு வழங்கப்படும் அதே வட்டி விகிதம்
• விவசாய கடனுக்கு வழங்கப்படும் அதே கடன் உத்திரவாதம், பாதுகாப்பு, குறிப்பிட்ட வரம்பு மற்றும் ஆவண நிபந்தனைகள்
கிஸான் கடன் அட்டையைப் பெறுவது எப்படி?
• உங்கள் அருகாமையிலுள்ள பொதுத்துறை வங்கிகளை அணுகி தகவல்களைப் பெறுங்கள்
• தகுதியுடைய விவசாயிகள் கிஸான் கடன் அட்டையையும் வங்கி பாஸ் புத்தகத்தையும் பெறுவார்கள். இது உடையவரின் பெயர், முகவரி, வைத்திருக்கும் நிலம் பற்றிய விபரம், பணம்பெறும் வரம்பு, செல்லுபடியாகும் காலம், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஒன்று ஆகியவற்றைக் கொண்டிருக்கும். மேலும் இது, அடையாள அட்டையாகவும் தொடர்செயல்பாடு அடிப்படையிலான நடவடிக்கைகளின் பதிவை வசதிசெய்யும் வகையிலும் பயன்படும்.
• பணம் பெறுவர் அட்டையும் பாஸ் புத்தகத்தையும், அந்தக் கணக்கை செயல்படுத்திக்கொள்ளும்போது சமர்ப்பிக்க கோரப்படுகிறார்.
முன்னணி வங்கிகளின் கிஸான் கடன் அட்டைகள்
• அலகாபாத் வங்கி - கிஸான் கடன் அட்டை
• ஆந்திரா வங்கி - ஏ பி கிஸான் பச்சை அட்டை
• பரோடா வங்கி - பி கே சி சி
• இந்திய வங்கி - கிஸான் சமாதன் அட்டை
• கனரா வங்கி - கிஸான் கடன் அட்டை
• கார்ப்பரேஷன் வங்கி - கிஸான் கடன் அட்டை
• தீனா வங்கி - கிஸான் தங்க கடன் அட்டை
• ஓரியண்ட் காமர்ஸ் வங்கி - ஓரியண்டல் பச்சை அட்டை
• பஞ்சாப் தேசிய வங்கி - பிஎன்பி கிருஷி அட்டை
• ஹைதராபாத் ஸ்டேட் வங்கி- கிஸான் கடன் அட்டை
• இந்திய ஸ்டேட் வங்கி - கிஸான் கடன் அட்டை
• சிண்டிகேட் வங்கி - எஸ் கே சி சி
• விஜயா வங்கி - விஜய கிஸான் அட்டை
இந்தியாவில் வேளாண் கடன் வழங்கும் வங்கிகள்
வங்களின் தேசியமயமாக்கல் என்பது, வேளாண்மையை பிரதானத் தொழிலாகக் கொண்ட பல்வேறு தொழில்கள் சார்ந்த பொருளாதார மண்டலங்களுக்கு கடன்வசதி செய்து தருவதற்கான சிறந்த நடவடிக்கையாகும். ஆற்றல் வாய்ந்த வளர்ந்துவரும் வேளாண் துறைக்கு, அதன் எல்லாவித வளர்ச்சியையும் துரிதப்படுத்துவதற்கு வங்கிகள் மூலம் போதுமான நிதி தேவைப்படுகிறது. 2004 - 05 லிருந்து தொடங்கும் மூன்று வருடங்களுக்கு, வேளாண்துறைக்கான கடனை இரட்டிப்பாக்கும்படி இந்த வங்கிகளை அரசு அறிவுறுத்தியுள்ளது. பதினொன்றாம் ஐந்தாண்டுத் திட்டத்தில், அரசு விவசாயத்திற்கு அளித்துள்ள சிறப்பு கவனம் மற்றும் நிதி ஒதிக்கீடு, இவற்றுடன் வங்கிகளால் அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்களின் பயன்களைப் பெறுவது இப்போது விவசாயிகளின் கையில்தான் உள்ளது. பின்வருபவை, சில தேசியமமாக்கப்பட்ட வங்களின் கடன் வாய்ப்புகளின் பட்டியலாகும்.
ஆந்திரா வங்கி (www.andhrabank-india.com)
• ஆந்திர வங்கியின் கிசான் பச்சை அட்டை
• தனிமனித விபத்துக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பாதுகாப்பு
பரோடாவங்கி (http://www.bankofbaroda.com/ )
• மானாவாரி விவசாயத்திற்கு பழைய டிராக்டர்களை வாங்குதல்
• வேளாண் மற்றும் கால்நடை இடுபொருட்கள் வழங்கும் முகவர்கள்/ விநியோகஸ்தர்கள்/ விற்பனையாளர்களுக்கான நடப்பு முதலீடு
• வேளாண் இயந்திரங்களை வாடகைக்கு அமர்த்திக்கொள்ளுதல்
• தோட்டக்கலை வளர்ச்சி
• கறவை மாடு வளர்ப்பு, பன்றி வளர்ப்பு, கோழி வளர்ப்பு, பட்டுப்புழு வளர்ப்பு போன்ற தொழிலில் ஈடுபட்டிருப்போருக்கு நடப்பு முதலீடு
• ஷெட்யூல்ட் வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் வேளாண் உபகரணங்கள், கருவிகள், உழவு மாடுகள் வாங்குவதற்ககும், நீர்ப்பசான வசதிகளை உருவாக்குவதற்குமான நிதி உதவி.
பாங்க் ஆப் இந்தியா (http://www.bankofindia.com/)
• ஸ்டார் பூமீஹீன் கிஸான் அட்டை - கூட்டு முறையில் விவசாயம் செய்வோர், எழுத்தின் படி மற்றும் எழுத்து மூலமற்ற குத்தைதாரர்கள் ஆகியோருக்கு
• கிஸான் சமாதான் அட்டை - பயிர் சாகுபடி மற்றும் அதை சார்ந்த இதர முதலீடுகளுக்கு
• பி.ஓ.ஐ. ஷதாப்தி கிருஷி விகாஸ் அட்டை - விவசாயிகளுக்கான எந்நேரமும் எவ்விடத்திலுமான மின்னணு வங்கி அட்டை
• வீரிய ஒட்டு விதை உற்பத்தி, பருத்தி ஆலை, சர்க்கரை ஆலை ஆகியவற்றிற்கு ஓப்பந்த வேளாண்மைக்கான நிதி உதவி
• சுய உதவிக்குழுக்கள் மற்றும் மகள்ிா மேம்பாட்டிருக்கான சிறப்புத் திட்டங்கள்.
• ஸ்டார் ஸ்வராஜ்கர் பிரஷிக்ஷன் சன்ஸ்தான் விவசாயிகளுக்கு தொழில்முனைவோர் பயிற்சி வழங்குவதற்கான ஒரு புதிய முயற்சி
• பயிர்க் கடன்கள் - மூன்று லட்சம் வரை (வருடத்திற்கு ஏழு சதவீத வட்டியில்)
• பிணை உத்தரவாதம்: 50000 ரூபாய் வரை, பிணை உத்தரவாதம் எதுவும் தேவையில்லை. ஆனால் 50000 ரூபாய்க்கு மேல், இந்திய ரிசர்வ் வங்கியின் உத்தரவுகள் கடைபிடிக்கப்படும்
தேனாவங்கி (http://www.denabank.com/)
தேனா குஜராத், மகாராஷ்ரா, சட்டீஸ்கர் மற்றும் யாத்ராவின் யு.டி. மற்றும் நகர் ஹாவேலி ஆகியற்றில் சிறப்பாக செயல்பட்டு இருக்கும் வங்கி தீனா வங்கியாகும்.
• தேனா கிஸான் தங்கக்கடன் அட்டைத் திட்டம்
• அதிகபட்சம் பத்துலட்சம் ரூபாய்வரை கடன் அளிக்கப்படும்
• குழந்தைகளின் கல்வி உட்பட வீட்டுச் செலவுகளுக்காக பத்து சதவீதம்வரை அளிக்கப்படும்
• ஒன்பது வருடம்வரை திருப்பிச் செலுத்த நீண்ட கால அவகாசம்
• வேளாண் உபகரணங்கள், டிராக்டர்கள், நீர்தெளிப்பு/ சொட்டுநீர் பாசனமுறைகள், மின்சார பம்ப் செட்டுகள் போன்ற எல்லா விதமான வேளாண் முதலீட்டிற்கும் கடன் கிடைக்கும்
• ஏழு சதவீத வட்டியில் மூன்று லட்சம் ரூபாய்வரை குறுகிய காலப் பயிர்க் கடன்
• விண்ணப்பபித்த பதினைந்து நாட்களுக்குள் கடன்கள் வழங்கப்படும்
• 50000 ரூபாய் வரையிலான வேளாண் கடன் மற்றும் வேளாண் ஆலோசனை மையம், வேளாண் வர்த்தக மையங்களுக்கான கடனுக்கு, 5 லட்சம் ரூபாய் வரையிலும் பணய உத்தரவாதம் தேவையில்லை
ஒரியண்டல் காமர்ஸ்வங்கி (http://www.obcindia.com/)
• ஓரியண்ட்ல் பச்சை அட்டைத் திட்டம்
• வேளாண் கடன்களுக்கான ஒருங்கிணைந்த கடன் திட்டம்
• குளிர்பதன அறைகள் / பண்டக சாலைகள் நிறுவுதல்
• முகவர்களுக்கான நிதி உதவி
இந்திய ஸ்டேட் வங்கி (http://www.statebankofindia.com/)
• சிண்டிகேட் கிஸான் கடன் அட்டை
• சூரிய அடுப்பு திட்டம்
• வேளாண் ஆலோசனை மையம மற்றும் வேளாண் வியாரபார மையங்கள்
விஜயா வங்கி (http://www.vijayabank.com/)
• சுய உதவிக் குழுக்களுக்கான கடன்கள்
• விஜயா கிஸான் அட்டை
• விஜயா பிளான்டர்ஸ் அட்டை
• கிராமத் தொழிற்சாலைகள் மற்றும் கைவினை கஞைர்களுக்கான கே.வி.ஐ.சி. திட்டம்
பயனுள்ள வங்கித்தொடர்புகள்
தகவல் ஆதாரம் : இந்திய முன்னேற்ற நுழைவாயில் http://http://www.indg.in/agriculture/credit/bb5bc7bb3bbeba3bcdb95b9fba9bcd/ என்ற இணையதளத்திலிருந்து
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
1 கருத்து:
Really good blog. I don't know how i missed this
கருத்துரையிடுக