ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கோமாரி நோயால் முப்பதுக்கும் மேற்பட்ட கால்நடைகள் இறந்துள்ளன।ஈரோடு மாவட்டத்தில் விவசாயிகள் அதிகமாக கால்நடைகள் வளர்த்து வருகின்றனர். பத்து ஆண்டுகளுக்கு முன் விவசாயிகள் ஒவ்வொருவரும் சராசரியாக பத்து கறவை மாடுகளை வளர்த்தனர்.நாளடைவில் மழை இல்லாமலும், உற்பத்தி பொருட்களுக்கு உரிய விலை கிடைக்காமலும் விவசாயம் குறைந்தது. இத்துடன் கால்நடை வளர்ப்பும் குறைந்தது.இந்த நிலையில் தற்போது இருக்கும் கால்நடைகளையும் நோயில் இருந்து காபாற்ற விவசாயிகள் முயற்சி செய்து வருகின்றனர். கடந்த ஒரு மாதத்தில் ஈரோடு மாவட்டத்தில பல்வேறு பகுதியில் சுமார் முப்பது கால்நடைகள் கால்நடைகளை தாக்கும் கோமாரி நோயால் இறந்துள்ளதால் விவசாயிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.
நன்றி-Webdunia
உழவர்களே -கவனம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக