27 பிப்., 2008

முதல் உலக வேளாண் வர்த்தக கருத்தரங்கு 2008

முதல் உலக வேளாண் வர்த்தக கருத்தரங்கு 2008 - இந்தியாவில்
மத்திய வேளான், உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சர் திரு. ஷரத் பவார் மற்றும் ஐ.நா. சபையின் உணவு மற்றும் விவசாயக் கழகத்தின் இயக்குநர், டாக்டர். ஜாக்குவஸ் டையூஃப் ஆகியோர் இணைந்து, இந்தியா, இந்த உலக வேளாண் வர்த்தக கருத்தரங்கை-2008-ல் நடத்தும் என்று அறிவித்துள்ளனர்.இந்திய அரசு, ஐ.நா. சபையின் உணவு மற்றும் விவசாயக் கழகம் மற்றும் GAIF ஆகியவை இணைந்து இந்த கருத்தரங்கை நடத்துகிறது.இந்த கருத்தரங்கில், வறுமையை ஒழிக்க வேளாண் வர்த்தகத்தை மேம்படுத்துவதற்காக பேச்சு வார்த்தை நடத்தப்படும். இந்த கருத்தரங்கானது, வளர்ந்து வரும் நாட்டிலுள்ள சிறு விவசாயிகளுக்கான முன்னேற்றத்தை தரக்கூடிய வழி முறைகளை வகுக்கும். வேளாண் அமைச்சகம், தொழில் துறை அமைச்சகம் மற்றும் வேளாண் தொழில் துறை வல்லுனர்கள், தனியார் உணவு உற்பத்தி தொழில் மையங்களிலிருந்து சுமார் 500 அனுபவம் மிகுந்த நபர்கள் இந்த கருத்தரங்கில் கலந்து கொள்வர். மேலும் விவரங்களுக்கு, www.gaif08.org
தகவல் : http://www.pib.nic.in/release/release.asp?relid=29721

கருத்துகள் இல்லை: