11 டிச., 2007

எரிசக்தியை சேமிக்க வேண்டுமா?

வீடுகளில்
தேவையில்லாத சமயங்களில் விளக்குகளை அணைத்துவிடுங்கள்
குழாய் மின் விளக்குள் மற்றும் பல்புகள் ஆகியவற்றிலும் அவை பொருத்தும் பொருள்களிலும் சேரும் தூசுக்களை அவ்வப்போது சுத்தம் செய்யுங்கள்
ஐ.எஸ்.ஐ., முத்திரையிட்ட மின்சார சாதனங்களையும், கருவிகளையுமே பயன் படுத்துங்கள்
குழாய் விளக்குகளையும், பல்புகளையும் அதன் வெளிச்சம் தடைபடாத இடத்தில் பொருத்துங்கள்
சிஃஎப்எல்களையே (சிதிலி) பயன்படுத்துங்கள்
எதனால் சிஃஎப்எல் களையே பயன்படுத்தவேண்டும்?
இன்கான்டசென்ட் (ஒளி இழைகள் சூடாவதால் வெளிச்சம் தருகிற) விளக்குகளான பல்புகளை விட ‘காம்பாக்ட் புளூரசண்ட்’ பல்பு மூன்றில் ஒரு பங்கு குறைவாக மின்சக்தியை, எடுத்துக் கொள்கின்றன. வெளியிடும் வெளிச்சமும் குறைவதில்லை. காம்பாக்ட் புளூரசண்ட் பல்புகள், இன்கான்டசென்ட் பல்புகள் அளிக்கும் வெளிச்சத்தைப் போலவே இதமாக இருக்கும். அதே சமயத்தில் 75% குறைவான மின்சாரத்தையே எடுத்துக்கொள்ளும்.

சி.எஃப்.எல்.-கள் சற்றே விலை கூடுதலானவையாக இருந்தாலும், அவற்றுக்கான முதலீடு பயனுள்ளது. அவை அளவில் சிறியவை. சிக்கனமானவை, அதிக வெளிச்சமும் கூடுதல் வண்ணத்தையும் தருபவை. சரியாகச் சொன்னால் 23 வாட் சக்தியுள்ள காம்பாக்ட் புளோரசென்ட் பல்பை 90 அல்லது 100 வாட் சக்தியுள்ள இன்கான்சென்ட் பல்பிற்குப் பதிலாகப் பயன்படுத்தலாம்.

ஒரு நாளைக்கு 4 மணிநேரங்களுக்கு மேலாக எரியும் விளக்குகள் உள்ள இடங்களில் காம்பாக்ட் புளோரசண்ட் பல்புகளை உபயோகியுங்கள். 75 வாட் சக்தியுள்ள இரண்டு பல்புகளுக்கு பதிலாக இரண்டு 15 வாட் புளோரசண்ட் பல்புகளைப் பயன்படுத்தினால் ஒரு வருடத்திற்கு 18 கிலோ வாட் மணிநேர சக்தியை மிச்சம் பிடிக்கலாம்.

சமையல்
எரிசக்தியைக் குறைவாக பயன்படுத்தும் அடுப்புகளைப் பயன்படுத்துங்கள்
சமைக்கும்போது, பாத்திரங்களை மூடிவைப்பதனால் சமைக்கும் நேரமும் எரிசக்தி உபயோகமும் குறைகிறது
சமைப்பதற்கு முன்னால் உணவுப் பொருட்களை ஊறவையுங்கள்.

மறுசுழற்சி மூலம் உருவாகும் தாள்களை பயன்படுத்துங்கள்

மறுசுழற்சித் தாள்களை, குறைவான இயற்கை வள ஆதாரங்களையும் குறைவான விஷத்தன்மையுள்ள வேதிப் பொருட்களையும் பயன்படுத்தித் தயாரிக்க முடிகிறது. வீனான தாள்களைக் கொண்டு செய்யப்படும் ஒரு டன் பேப்பர்

· பதினைந்து மரங்களைக் காப்பாற்றுகிறது

· 2500 கிலோ வாட் மணிகள் அளவுள்ள எரிசகக்தியை சேமிக்கிறது

· 20,000 லிட்டர் தண்ணீர் சேமிக்கப்படுகிறது

· 25 கிலோகிராம் அளவு மாசுகள் காற்றில் கலப்பது குறைகிறது.


விவசாயத்தில் எரிசக்தியைச் சேமிக்கும் முறைகள்

ஐ.எஸ்.ஐ. முத்திரையுள்ள பம்புகள் பயன் படுத்துவதன் மூலம் சிறியதும் பெரியதுமான பழுதுகளால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைத்து, பம்பின் திறனை 25% லிருந்து 35% வரை மேம் படுத்தலாம்
பெரிய வால்வு போடுவதால் கிணற்றிலிருந்து தண்ணீர் எடுக்கக் குறைவான எரிபொருளும், மின்சக்தியுமே தேவைப்படும் என்பதால் மின்சார, டீசல் உபயோகம் குறையும்
குழாய்களில் வளைவுகளும் இணைப்பான்களும் எந்த அளவிற்குக் குறைவாக உள்ளனவோ அந்த அளவுக்கு மின்சக்தியை அதிகமாகச் சேமிக்க முடியும்
குழாய்களில் சாதாரணமான வளைவுகளைக் காட்டிலும் கூர்மையான வளைவுகளால் தேய்மானம் 70% அதிகமாகும்
குழாயின் நீளத்தை 2 மீட்டர் குறைத்தால் ஒரு விவசாயி ஒவ்வொரு மாதமும் 15 லிட்டர் டீசலைச் சேமிக்க முடியும்
கிணற்றின் நீர்மட்டத்திற்கு மேல் 10 அடியைத் தாண்டாதவாறு பம்ப் பொருத்தப்பட்டால் அதன் திறன் அதிகரிக்கும்
தரமான பிவிசி உறிஞ்சு குழாயைப் பயன்படுத்துவதன் மூலம் 20% எரிபொருளையும், மின்சாரத்தையும் சேமிக்க முடியும்
உற்பத்தி நிறுவனத்தின் பரிந்துரைகளின்படி பம்ப்செட்டில் எண்ணெய் அல்லது கிரீஸைத் தொடர்ந்து உபயோகித்துவர வேண்டும்
மின்சக்தி உபயோகம், மற்றும் வோல்டேஜின் சரியான பயன்பாடு ஆகியவற்றிற்காக, ஐ.எஸ்.ஐ. முத்திரையிட்ட சரியான அளவிலான ஷண்ட் கெபாசிடர் மற்றும் மோட்டரைப் பயன்படுத்த வேண்டும். இதனால் மின்சாரத்தையும் சேமிக்க முடியும்
பமப்செட் அருகில் இருக்கும் விளக்கைப் பகல் நேரங்களில் அணைத்து வையுங்கள்

தகவல் ஆதாரம் : http://www.indg.in/rural-energy/technologies-under-rural-energy/energy-efficient-technologies/ake201afaco201e-abeisdiyea3u-aboa3eacue153

கருத்துகள் இல்லை: